தசராவை முன்னிட்டு கார்ட்ரேட் டெக் சிஎஸ்ஆர், கார்ட்ரேட் ஃபவுண்டேஷன், அதன் முதல் முயற்சியான 'DriveASmile' ஐ அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் மொபிலிட்டி செக்டரில் ஒழுக்கம் மற்றும் புதிய மாற்றத்தை உண்டாக்கும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி மல்டி சேனல் ஆட்டோ ப்ளாட்ஃபார்ம் என்ற வகையில், கார்ட்ரேட் டெக் இந்த புதிய முயற்சியின் மூலம் வாகனத் துறையில் புதுமை மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணித்துள்ளது.
DriveASmile என்பது டாக்ஸி ஓட்டுநர்கள், உணவு விநியோக பணியாளர்கள், ஆட்டோ ஆலைத் தொழிலாளர்கள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள், ஆட்டோமொபைல் டீலர்ஷிப் ஊழியர்கள், குடும்பங்கள், இரக்கமுள்ள நன்கொடையாளர்கள் மற்றும் நன்கொடை நிறுவனங்கள் உட்பட, நடமாடும் துறையில் பணிபுரியும் தனிநபர்களை இணைக்கும் டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் ஆகும். மொபிலிட்டி துறையில் நிதி சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவ நன்கொடையாளர்களுக்கு இந்த ப்ளாட்ஃபார்ம் உதவும்.
தற்போது, இரண்டு திட்டங்கள் நேரலையில் உள்ளன: கார் டீலர் ஊழியர்களுக்கான கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கான ஆதரவு மற்றும் போக்குவரத்துத் தொழில் குடும்பங்களுக்கான கல்விக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றன.
கார்ட்ரேட் டெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் வினய் சாங்கி, 'மொபிலிட்டி மற்றும் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையுடன் தொடர்புடையவர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதுனால் நாங்க இந்த DriveASmile முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். அதன் உதவியுடன் நன்கொடையாளர்கள் மற்றும் தேவைப்படுபவர்களை இணைக்கிறது. தசரா விழாவில் எங்களுக்கு DriveASmile முயற்சியைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறேன், இது உதவும் மற்றும் ஆட்டோ இன்டஸ்ட்ரீயில் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்