சாலைகள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்களைப் பற்றி பேசும்போது, அவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருப்பது இன்னும் முக்கியமானது. இன்றைய சாலைகளில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால், பாதுகாப்பான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. 8 லட்சம் பட்ஜெட்டில் ஆறு ஏர்பேக்குகள் கொண்ட கார் வேண்டுமானால், உங்களுக்கு பல பெஸ்ட் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார்கள் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் பட்ஜெட்டிலும் பொருந்துகின்றன.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
5.92 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த கார் ஆறு ஏர்பேக்குகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ஆகிய ஐந்து வேரியன்ட்ஸுடன் இந்த ஹேட்ச்பேக் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் வருகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டர் 6.13 லட்சத்தில் ஆரம்பமாகிறது மற்றும் ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. எக்ஸ்டர் ஆனது 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்கும் சிஎன்ஜி கிட் உடன் கூடிய 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது.
ஹூண்டாய் ஆரா
இதன் விலை ரூ. 6.49 லட்சத்தில் தொடங்குகிறது, இதில் ஆறு ஏர்பேக்குகள் உள்ளன. மாருதி டிசையர் நிறுவனத்துடன் போட்டியிடும் இந்த செடான், E, S, SX மற்றும் SX (O) ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
மாருதி சுஸுகியின் இந்த பிரபலமான காரின் விலையும் ரூ. 6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, மேலும் இது ஆறு ஏர்பேக்குகளையும் கொண்டுள்ளது. மே 9, 2024 அன்று, மாருதி சுஸுகி தனது நான்காவது ஜெனரேஷன் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தியது, இது LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi ப்ளஸ் ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கிறது.
ஹூண்டாய் i20
இதன் விலை ரூ. 7.04 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, இதில் ஆறு ஏர்பேக்குகள் உள்ளன. புதிய அமேசான் க்ரே, அட்லாஸ் ஒயிட், டைட்ன் க்ரே, டைஃபூன் சில்வர், ஸ்டார்ரி நைட் மற்றும் ஃபையரி ரெட் ஆகிய ஆறு சிங்கிள்-டோன் விருப்பங்களிலிருந்தும், பிளாக் ரூஃபுடன் கூடிய அட்லாஸ் ஒயிட் மற்றும் ஃபையரி ரெட் உடன் பிளாக் ரூஃபுடன் இரண்டு டூயல்-டோன் வண்ண விருப்பங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
மஹிந்திரா XUV 3XO
இந்த சிறிய எஸ்யுவி ரூ. 7.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது மற்றும் ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்தியா முழுவதும் 10,000க்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. அதேசமயம், மஹிந்திராவின் இந்த எஸ்யுவி கார் அதிகாரப்பூர்வ முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் 50,000 யூனிட்டுகளுக்கு மேல் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
ஹூண்டாய் வென்யூ
இது ரூ. 7.94 லட்சத்தில் தொடங்குகிறது மற்றும் ஆறு ஏர்பேக்குகளையும் கொண்டுள்ளது. இது தவிர, ஃப்ரண்ட் கோலிஷன் வார்னிங்க் மற்றும் அவாய்டன்ஸ் அஸ்சிஸ்டன்ஸ், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் அஸ்சிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங்க், லேன் ஃபாலோ அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் லீட் வேஹிகள் டிபார்ச்சர் அலர்ட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
கியா சோனெட்
கியாவின் இந்த எஸ்யுவி ரூ. 7.99 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது, மேலும் இது ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட் (X லைன் டீசல் ஏடீ) ரூ. 15.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் மூன்று இன்ஜின்கள், 11 வண்ணங்கள் மற்றும் ஏழு வேரியன்ட்ஸிலிருந்து தேர்வு செய்யலாம்.
டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் ரூ. 8.0 லட்சத்தில் தொடங்குகிறது மற்றும் ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. இதுவரை 99 வேரியன்ட்ஸில் கிடைக்கும் டாடாவின் வெற்றிகரமான கார்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில், டாடா நெக்ஸானின் 7 லட்சம் யூனிட்கள் விற்பனை முடிந்ததைக் கொண்டாடும் வகையில், இந்த மாடலில் ரூ. 1 லட்சம் வரை பெரும் தள்ளுபடியை டாடா வழங்கியது.
மேலே குறிப்பிட்டது போல், இந்த கார்கள் ஆறு ஏர்பேக்குகளுடன் தரமாக வருகின்றன, இவை ரூ. 8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இவற்றில் பெரும்பாலானவை ஹூண்டாய் கார்களை உள்ளடக்கியது, ஏனெனில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஹூண்டாய் இந்தியா கடந்த ஆண்டு அக்டோபரில் #Safetyforall முயற்சியைத் தொடங்கியது, இதன் கீழ் அனைத்து ஹூண்டாய் கார்களிலும் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.
முடிவுரை
இந்த அனைத்து கார்களிலும் நிலையான அம்சமாக ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன, இது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். 8 லட்சம் பட்ஜெட்டில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான காரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஆப்ஷன் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த கார்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், சாலைப் பாதுகாப்பில் நீங்கள் ஒரு முக்கியமான படியை எடுக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்