- மார்ச் 5, 2024 அன்று இதன் விலை அறிவிக்கப்படும்
- இது இந்தியாவில் பிஒய்டி இன் மூன்றாவது மாடலாகும்
மார்ச் 5, 2024 அன்று, பிஒய்டி இந்தியா தனது ஆல்-எலக்ட்ரிக் செடானின் விலையை நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓஷியன் இன்ஸ்பயர் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இப்போது புதிய பிஒய்டி சீல் வேரியன்ட்ஸ் மற்றும் வண்ண விருப்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளோம், அதை இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம்.
பிஒய்டி சீல் ஸ்டாண்டர்ட், எக்ஸ்டென்டெட் ரேஞ்ச் மற்றும் பர்ஃபார்மன்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் இதை காஸ்மோஸ் பிளாக், அரோரா ஒயிட், அட்லாண்டிஸ் க்ரே மற்றும் ஆர்க்டிக் ப்ளூ உள்ளிட்ட நான்கு வண்ண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
பிஒய்டி சீல் ஆனது ரோட்டேடெபள் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்ட் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ஏடாஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஓஆர்விஎம்களுக்கான மெமரி ஃபங்ஷன், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி அம்சங்களும் வழங்கப்படலாம்.
சீல் 61.4kWh மற்றும் 82.5kWh யூனிட் ஆகிய இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைப் பெற வாய்ப்புள்ளது. இந்த பேட்டரிகள் முறையே 460 கிமீ மற்றும் 570 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்