- சீல் இவிமூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
- இது இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் கிடைக்கிறது
பிஒய்டி தனது சீல் இவி'யின் விலையை நாளை அறிவிக்க உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் திறக்கப்பட்டது மற்றும் இது முதலில் டெல்லியில் 2023 இன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய சீல் இவி சர்வதேச சந்தையில் 61.4kWh மற்றும் 82.5kWh பேட்டரி பேக்குகளுடன், முறையே 460 கிமீ மற்றும் 570 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த இரண்டு விருப்பங்களும் இந்தியா-ஸ்பெக் காரில் வழங்கப்படுமா இல்லையா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.
ஆர்க்டிக் ப்ளூ, அட்லாண்டிஸ் கிரே, அரோரா ஒயிட் மற்றும் காஸ்மோஸ் பிளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களிலிருந்து பிஒய்டி சீலைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், இது ஸ்டாண்டர்ட், எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் மற்றும் பர்ஃபார்மன்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. E6 மற்றும் அட்டோ 3க்கு பிறகு கார் தயாரிப்பாளரின் மூன்றாவது மாடலாக இது இருக்கும்.
ரோட்டேடிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 ஏடாஸ், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபோன் இணைப்பு, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேடெட் மற்றும் எலக்ட்ரிகல்லி சரிசெய்யக்கூடிய சீட்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் பிஒய்டி சீல் வரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்