- இது மூன்று வேரியன்ட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- 650 கிமீ தூரம் வரை செல்லும் சக்தி கொண்டது
பிஒய்டி இந்தியா இந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் சீல் செடானை அறிமுகப்படுத்தியது. இந்த ஃபுல் எலக்ட்ரிக் செடான் அதன் விலை, தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் விருப்பங்களால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் இப்போது நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பதிவு செய்துள்ளது.
பிஒய்டி சீல் ஆனது டைனமிக், ப்ரீமியம் மற்றும் பர்ஃபார்மன்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் ஆர்க்டிக் புளூ, அட்லாண்டிஸ் க்ரே, காஸ்மோஸ் பிளாக் மற்றும் அரோரா ஒயிட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது. அம்சங்களைப் பொறுத்த வரையில், டாப்-ஸ்பெக் பர்ஃபார்மன்ஸ் வேரியன்ட்டில் கர்வ்ட் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஃப்ரண்ட் வென்டிலேட்டட் மற்றும் ஹீட் சீட், பவர்ட் முன்-வரிசை சீட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் லெவல் 2 ஏடாஸ் ஆகியவற்றுடன் வருகின்றன.
சீல்லை வாடிக்கையாளர்கள் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம், அதில் ஒன்று 61.44kWh மற்றும் மற்றொன்று 82.56kWh. கூடுதலாக, ஒரு முறை சார்ஜ் செய்தால் 650 கிமீ வரை ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட டிரைவிங் ரேஞ்சை தரும் என சீல் நிறுவனம் கூறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்