- 2024 ஆம் ஆண்டின் நடுபகுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- 700 கி.மீ வரை கோரப்பட்ட ரேஞ்சைப் பெறுகிறது
இந்தியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி சீல், யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் ஃபைவ்-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. சீன வாகன உற்பத்தியாளரின் ஆல்-எலக்ட்ரிக் செடான் அடல்ட் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முழு ஐந்து மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டின் விதிகளின் கீழ், அடல்ட் சேஃப்டி, குழந்தை குடியிருப்பாளர் பாதுகாப்பு, பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்கள் மற்றும் பாதுகாப்பு உதவி உள்ளிட்ட நான்கு முக்கிய அளவுருக்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது. சீல் செடான் முன்பக்க தாக்கம், பக்கவாட்டு தாக்கம் மற்றும் பின்புற தாக்கம் ஆகியவற்றிற்காக பெரும்பாலும் 'நல்லது' மற்றும் 'போதுமானதாக' மதிப்பிடப்பட்டது. அடல்ட் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முறையே 89 மற்றும் 86 சதவீதம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களின் மதிப்பீடு 82 சதவீதமாகவும், பாதுகாப்பு உதவி 76 சதவீதமாகவும் உள்ளது.
பிஒய்டி சீல் பிராண்டின் இ-ப்ளாட்ஃபார்ம் 3.0’ஐ அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச அளவில், ப்ரீமியம் செடான் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் கிடைக்கிறது - 61.4kWh மற்றும் 82.5kWh யூனிட். முந்தையது 550 கி.மீ வரை கோரப்பட்ட ரேஞ்சை வழங்குவதாக மதிப்பிடப்பட்டாலும், பிந்தையது ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ வரை ஓட்டும் திறன் கொண்டது. செயல்திறனைப் பொறுத்தவரை, செடான் 0.219Cd இன் ஏரோ டிராக் குணகத்தைக் கொண்டுள்ளது மற்றும் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டது.
வெளியீட்டு பொறுத்தவரை, எலக்ட்ரிக் செடான் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா EV6 மற்றும் வால்வோ C40 ரீசார்ஜ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்