- இந்தியாவில் இதன் விலை மார்ச் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும்
- பிராண்டின் மூன்றாவது மாடலாக இது இருக்கும்
பிஒய்டி நிறுவனம் தனது முதல் செடான் “சீல்” ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இதன் விலை மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது, இது e6 எம்பீவி மற்றும் அட்டோ 3 எஸ்யுவிகுப் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் பிராண்டின் மூன்றாவது கார் ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிஒய்டி டீலர்கள் பிப்ரவரி 2024 இல் சீல் செடானுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளைத் தொடங்கினர். இது சமீபத்தில் இந்தியாவில் டெஸ்டிங்கில் காணப்பட்டது, இது இந்தியாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.
பிஒய்டி சீல் டிசைனைப் பற்றி பேசுகையில், இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல்கள் கொண்ட ஸ்வீப்பேக் ஹெட்லேம்ப்ஸ், பிளாங்க்-ஆஃப் கிரில், ஃப்ரண்ட் பம்பரில் டிஆர்எல் செட், ஃப்ளஷ் ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், டூயல்-டோன் வீல்ஸ், ரியர் பம்பரில் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் ஒரு டிஃப்பியூசர் உள்ளது.
கேபினுக்கு உள்ளே, ப்ளு இன்டீரியர் தீம், ரோடெட்டிங்க் டச்ஸ்கிரீன் செட்-அப், வயர்லெஸ் ஃபோன் கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் 10.25-இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீல் இவி ஆனது 61.4kWh மற்றும் 82.5kWh பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது, இது ஒரு முழு சார்ஜில் 700 கிமீ வரை செல்லும். மேலும், இந்த மாடல் 3.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்று நிறுவனம் கூறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்