- இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனில் மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
- 650 கிமீ வரை செல்லக்கூடிய உரிமை கோரப்பட்ட ரேஞ்சை பெறுகிறது
பிஒய்டி இந்தியா இறுதியாக நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீல்லை ரூ. 41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இது e6 மற்றும் அட்டோ 3க்கு பிறகு பிராண்டின் மூன்றாவது எலக்ட்ரிக் காராகும், மேலும் இது டைனமிக், ப்ரீமியம் மற்றும் பர்ஃபார்மன்ஸ் என மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதை ஆர்க்டிக் ப்ளூ, அரோரா ஒயிட், அட்லாண்டிஸ் கிரே மற்றும் காஸ்மோஸ் பிளாக் என நான்கு வண்ணத்திலிருந்து இந்த எலக்ட்ரிக் செடான்னை தேர்வு செய்யலாம்.
டிசைனில் இது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் மாடலாக உள்ளது, இது டபுள்-U ஃப்லோட்டிங்க் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஃப்ரண்ட் பம்பரில் ஏரோ வடிவ இன்சர்ட்ஸைக் கொண்டுள்ளது. இதில் ஸ்லோபிங்க் ரூஃப்லைன் மற்றும் மறைக்கப்பட்ட ஃப்ளஷ் டோர் ஹேண்டல்ஸ். ரியரில், எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் பிளாக் டிஃப்பியூசர் மூலம் பானெட்டின் நீளம் முழுவதும் இயங்கும் எல்இடி பார் பெறும். இதில் 19-இன்ச் டூயல்-டோன் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸும் உள்ளன.
அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 15.6 இன்ச் ரோட்டேடிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,10.25 இன்ச் எல்சிடி டிரைவர் டிஸ்ப்ளே, லெவல்2ஏடாஸ்,வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபோன் கனெக்டிவிட்டி, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேடெட் மற்றும் எலக்ட்ரிகல்லி சரிசெய்யக்கூடிய சீட்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் பனோரமிக் சன்ரூஃப் mமற்றும் பல அம்சங்கள் இதில் உள்ளது.
சீல் 61.44kWh மற்றும் 82.56kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக்குகளைக் கொண்டுள்ளது, இது முறையே 510 கிமீ மற்றும் 650 கிமீ வரை செல்லும். முந்தைய பேட்டரி 201bhp மற்றும் 310Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும் போது, பிந்தையது 308bhp மற்றும் 360Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும், இதன் பர்ஃபார்மன்ஸ் வேரியன்ட் 523bhp மற்றும் 670bhp டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது.
பிஒய்டி சீல் வேரியன்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மாறுபாடு | எக்ஸ்-ஷோரூம் விலை |
டைனமிக் | ரூ. 41,00,000 |
ப்ரீமியம் | ரூ. 45,55,000 |
பர்ஃபார்மன்ஸ் | ரூ. 53,00,000 |