- புதிய ஆர்க்கிடெக்சர் உடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி
- புதிய ஸ்டீயரிங் மற்றும் பல இன்டீரியர் மாற்றங்கள் உள்ளடக்கியது
பிஒய்டி ஒரு சீன கார் தயாரிப்பாளர். அதன் சொந்த நாடான சீனாவில், சீல் செடானை புதுப்பித்துள்ளது. புதிய அப்டேட் மூலம், ஃபுல் எலக்ட்ரிக் செடான் ஃபாஸ்ட் சார்ஜிங், புதிய ஆர்க்கிடெக்சர், எக்ஸ்டீரியர் மாற்றங்கள் மற்றும் இன்டீரியர் மாற்றங்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
முதலில் டெக்னாலஜியை பற்றி பேசினால், பிஒய்டி சீலின் முந்தைய வெர்ஷன் 400V ஆர்க்கிடெக்சர் அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இப்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் 800V ஆர்க்கிடெக்சர் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த புதிய ஆர்க்கிடெக்சர்'இ-பிளாட்ஃபார்ம் 3.0 இவோ' என்று அழைக்கப்படுகிறது, இது ஃபாஸ்ட் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. சீலின் தற்போதைய மாடல் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 37 நிமிடங்கள் எடுக்கும். அதே நேரத்தில், இப்போது லேட்டஸ்ட் வெர்ஷனில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இது தவிர, சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் இரண்டு பேட்டரி பேக்குகளின் விருப்பத்தைக் கொண்டிருக்கும், முதலாவது 61.44kWh மற்றும் இரண்டாவது 80.64kWh பேட்டரி பேக் யூனிட் ஆகும். இந்த கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கிமீ தூரம் வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய BYD சீல் புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலோய் வீல்கள் மற்றும் டெயில்கேட்டில் மாறுபட்ட பிஒய்டி லோகோ உட்பட இன்னும் சில மாற்றங்களைப் பெறுகிறது. டெக்னாலஜியை பொறுத்தவரை, இந்த காரின் ரூஃபில் லேசர் சென்சார் வழங்கப்பட்டுள்ளது, இது ஏடாஸ் ஐ மேலும் மேம்படுத்துகிறது.
இன்டீரியருக்கு வரும்போது, சீல் செடான் புதிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏசி வென்ட்ஸ் மற்றும் சற்று மாற்றப்பட்ட டாஷ்போர்டு லேஅவுட்டில் முக்கிய புதுப்பிப்புகளைப் பெறுகிறது. இப்போது புதுப்பிக்கப்பட்ட பிஒய்டி சீல் மார்ச் 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த புதிய வெர்ஷன் 2025 க்குள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்