- 41 லட்சம் ஆரம்ப விலையில் வழங்கப்படுகின்றன
- இது 650 கிமீ தூரம் செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது
பிஒய்டி இந்தியா நாடு முழுவதும் ஒரே நாளில் 200 யூனிட் சீல் செடான்களை டெலிவரி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில், சீன வாகன உற்பத்தியாளர் இந்த ஃபுல் எலக்ட்ரிக் செடானுக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டு மாதங்களில் 1,000 க்கும் மேற்பட்ட புக்கிங் பதிவு செய்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட சில நகரங்களில் மெகா டெலிவரி இவண்ட் நடத்தப்பட்டது, இதில் ஒரே நேரத்தில் 200 சீல் வழங்கப்பட்டன.
சீல் இந்தியாவில் மார்ச் 5, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் ஆரம்ப விலை ரூ. 41 லட்சம், எக்ஸ்-ஷோரூம். இது டைனமிக், பிரீமியம் மற்றும் பர்ஃபார்மன்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. சீல் ஆனது 61.44kWh மற்றும் 82.56kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் விருபங்களில் வழங்குகிறது. கூடுதலாக, இந்த செடான் ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 650 கிமீ வரை ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியில், பிஒய்டி இந்தியாவின் எலக்ட்ரிக் பயணிகள் வாகன வணிகத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், 'நாட்டில் சீல்க்கு கிடைத்த வலுவான வரவேற்பு, இந்த பிரீமியம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. பிஒய்டி சீல் அறிமுகம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலத்தை உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்