- சீகல் மற்றும் சீ லயன் பெயர்ப்பலகைகளுக்கு முத்திரை விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது
- பிஒய்டி சீல் எலக்ட்ரிக் செடான் வரும் மாதங்களில் அறிமுகமாகும்
பிஒய்டி இந்தியா, இவி-தயாரிப்பாளர் நாட்டில் புதிய மாடல்ஸை அறிமுகப்படுத்தலாம் என்று இரண்டு புதிய பெயர்ப்பலகைகளை முத்திரை செய்துள்ளது. ‘சீகல்’ மற்றும் ‘சீ லயன்’ பெயர்களுக்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சீகல் ஹேட்ச்பேக் ஆகும், அதே சமயம் சீ லயன் ஒரு எலக்ட்ரிக் எஸ்யுவி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வெளிநாட்டில் டெஸ்டிங் செய்து வருகின்றன.
பிஒய்டி சீகல் மற்றும் சீ லயன்
வெளிநாட்டில் டெஸ்டிங் செய்யப்பட்ட சீ லயன் மிட் சைஸ் எஸ்யுவியின் ஸ்லோபிங்க் ரூஃப்லைன், ரியர் ஸ்பாய்லர் மற்றும் 15.6-இன்ச் ரோட்டெடிங்க் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் இருக்கும்.
இதற்கிடையில், சீகல் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஃப்ரண்ட்டில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படுகிறது, இது 30kWh மற்றும் 38kWh பேட்டரி பேக்ஸில் கிடைக்கின்றன. இது சிங்கிள் சார்ஜில் 405 கி.மீ வரை ரேஞ்சில் செல்லும், சீகல் கிட்டத்தட்ட 3.8 மீட்டர் நீளம் மற்றும் 2,500 மி.மீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், இது டாடா டியகோ இவி மற்றும் சிட்ரோன் eC3 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
இந்தியாவில் பிஒய்டி கார்ஸ்
பிஒய்டி தற்போது இந்தியாவில் e6 மற்றும் அட்டோ 3 என இரண்டு இவிஸை விற்பனை செய்து வருகிறது. e6 ஒரு எலக்ட்ரிக் எம்பீவி, அட்டோ 3 உயர்நிலையில் உள்ளது மற்றும் இது வால்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் எலக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். அட்டோ 3 இன் விலை ரூ.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் அதன் ஆற்றலை 60.48kWh பேட்டரி பேக்கிலிருந்து பெறுகிறது மற்றும் இது 521 கி.மீ ஏஆர்ஏஐ-சோதித்த ரேஞ்ச் வரை உள்ளது.
வரவிருக்கும் பிஒய்டி இவி'ஸ்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், பிஒய்டி சீல் எலக்ட்ரிக் செடானைக் காட்சிப்படுத்தியது. இந்த இவி ஏற்கனவே மற்ற சர்வதேசத்தில் விற்பனையில் உள்ளது மற்றும் 61.4 அல்லது 82.5kWh பேட்டரி பேக்ஸுடன் வழங்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 700 கி.மீ வரையிலான ரேஞ்சை தருகிறது, மேலும் சீல் மாடல் 0-100 கி.மீ ஸ்பீடை 3.8 வினாடிகளில் பிடிக்கும்.
2023-24 நிதியாண்டின் இரண்டாவது ஆண்டில் சீல் இந்தியாவில் அறிமுகமாகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்