- பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் e6 ஒரு புதிய எம்பீவியாக மாறும்
- முன்பதிவு தொகை ரூ. 51,000
பிஒய்டி இந்தியா தனது புதிய காரான இமேக்ஸ் 7 ஐ நாளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது இந்தியாவில் தற்போதுள்ள ஆல்-எலக்ட்ரிக் எம்பீவி e6 இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும். இந்த மாடலின் விலை நாளை அதாவது அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும், ஆனால் அதன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது மற்றும் டோக்கன் தொகை ரூ. 51,000 ஆகும். இப்போது இந்த கட்டுரையில் இதுவரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மடளின் அம்சங்களைப் பற்றி பேசுவோம்.
பிஒய்டி இமேக்ஸ் 7 இன் டிசைன் e6 இலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இதில் புதிய ஃப்ரண்ட் லூக், மெலிதான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹெட்லேம்ப்களை இணைக்கும் ஒற்றை ஸ்லாட் குரோம், அங்குலர் ஏர் டக்ட்ஸ், புதிய அலோய் வீல்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவற்றுடன் புதிய தோற்றம் உள்ளது. கனெக்டெட் எல்இடி டெயில் லைட்ஸ் போன்ற எக்ஸ்டீரியர் அம்சங்கள் இருக்கலாம்.
இன்டீரியர் மற்றும் அம்சங்களைப் பொறுத்த வரையில், இமேக்ஸ் 7 ஆனது 12.8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட புதிய டாஷ்போர்ட், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், வென்டிலேடெட் ஃபங்ஷன் கொண்ட லெதரெட் சீட்ஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், பவர்ட் டெயில்கேட் மற்றும் ஒரு பெரிய பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப் உட்பட பல மாற்றங்களைப் பெறும்.
கூடுதலாக, டீஸர் படங்களின்படி, இமேக்ஸ் 7 ஆனது ஆறு இருக்கை அமைப்பிலும், இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்ஸுடன் வழங்கப்படும். கூடுதலாக, இரண்டு ரியர் வரிசைகளிலும் ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்ஸ், கப் ஹோல்டர்ஸ், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் த்ரீ-பாயின்ட் சீட் பெல்ட்கள் கிடைக்கும்.
இருப்பினும், இன்ஜின், பேட்டரி பேக் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் நாளை அறிமுகத்தில் வெளியிடப்படும். பிஒய்டி இமேக்ஸ் 7 இன் முதல் 1,000 வாடிக்கையாளர்கள் டெலிவரியில் ரூ. 51,000 வரை சலுகை பெறுவார்கள், மேலும் 7kW மற்றும் 3kW இன் இலவச சார்ஜருடன். இருப்பினும், இந்தச் சலுகை அக்டோபர் 8, 2024க்குள் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கும் மே 25, 2025க்கு முன் டெலிவரி செய்வதற்கும் மட்டுமே செல்லுபடியாகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்