- E6 எம்பீவி இந்தியாவில் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது
- பெரிய பேட்டரி பேக்குடன் கிடைக்கும்
பிஒய்டி நிறுவனம் E6 ஃபேஸ்லிஃப்ட்டை இந்திய சந்தையில் எப்போது வெளியிடுவது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பிராண்டின் லோக்கல் வெப்சைட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்போது அதற்கான டீசரை ஆட்டோமேக்கர் வெளியிட்டுள்ளது, அதில் E6 ஃபேஸ்லிஃப்ட் புதிய அடையாளத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, E6 ஃபேஸ்லிஃப்ட் ஒரு பெயர் மாற்றத்தைப் பெற்று புதிய பெயருடன் கொண்டு வருகிறது.
E6 ஃபேஸ்லிஃப்ட் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சந்தைகளில் M6 மாடலாக அறியப்பட்டாலும், இமேக்ஸ் 7 இந்திய சந்தையில் அதற்கு ஒரு புதிய பெயரைக் கொண்டு வந்துள்ளது. எனவே, E6 ஃபேஸ்லிஃப்ட் கார் இனி இமேக்ஸ் 7 என அழைக்கப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, 'இ' என்ற எழுத்து எலக்ட்ரிக் டிரைவ்வை குறிக்கிறது, அதே நேரத்தில் மேக்ஸ் என்பது பிஒய்டி E6 ஐ விட சிறந்த பர்ஃபார்மன்ஸ், ரேஞ்ச் மற்றும் அம்சங்களைக் குறிக்கிறது. மேலும், இதில் '7' என்ற எண் வாகனக் குறியைக் குறிக்கிறது. ஏனெனில், தற்போதைய ஜெனரேஷன் மாடல் E6 காராக கருதப்படுகிறது.
தற்போது E6 மாடல் 71.7kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. இப்போது வரவிருக்கும் இமேக்ஸ் 7 மாடல் 71.8kWh பேட்டரி பேக்குடன் வர வாய்ப்புள்ளது. மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 30 கிமீ கூடுதல் டிரைவிங் ரேஞ்சை வழங்கும், மொத்தமாக 530 கிமீ டிரைவிங் ரேஞ்ச் கிடைக்கும். மேலும் பவர் வெளியீட்டைப் பொறுத்தவரை, இது 94bhp முதல் 204bhp பவரையும், 180 Nm முதல் 310Nm டோர்க் திறனையும் உற்பத்தி செய்யும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்