வாகனத் துறை BS6 விதிமுறைகளின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையத் தயாராக உள்ளது. ஏப்ரல் 1, 2023 முதல் தயாரிக்கப்பட்ட அனைத்து நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களும் புதிய BS6 ஃபேஸ் 2 மற்றும் ரியல் டிரைவிங் எமிஷன் அல்லது ஆர்டிஇ எமிஷன் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், எல்லா வாகனங்களும் இப்போது நிஜ உலக நிலைமைகளில் கூட எமிஷன் அளவை சந்திக்க வேண்டும்.
பல உற்பத்தியாளர்கள் தங்கள் BS6 2 மாடல்ஸை மாற்றியமைத்து அறிமுகப்படுத்தியிருந்தாலும், சிலர் இந்த எமிஷன் விதிமுறை மாற்றத்தை இன்னும் செய்யவில்லை. ஏற்கனவே இந்தத் திருத்தத்தைச் செய்த கார் தயாரிப்பாளர்களின் முழுமையான பட்டியலை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம், மேலும் வரும் நாட்களில் புதுப்பிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
BS6 ஃபேஸ் 2 மாடல்ஸைக் கொண்ட கார் தயாரிப்பாளர்கள்
ஹூண்டாய்
ஹூண்டாய் இந்தியா, புதிய ஆர்டிஇ விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய ஆரம்ப நிறுவனங்களில் ஒன்றாகும். ஜனவரியில் BS6 2-கம்ப்ளைன்ட் நியோஸ் மற்றும் ஆராவை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்த பிராண்ட் மாற்றத்தை துவக்கியது மற்றும் க்ரெட்டா, அல்காசர் மற்றும் வென்யூ அடங்கிய எஸ்யுவி வரிசையில் விரைவில் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த செயல்பாட்டில் ஹூண்டாய் இந்தியா 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் மில்லை சக்திவாய்ந்த 1.5-லிட்டர் டர்போ இன்ஜினுடன் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா BS6 ஃபேஸ் 2 தயாராக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஹூண்டாய் வாகனங்களும் E20 ஃபியூல் கலவையில் இயங்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ்
பிப்ரவரி 2023 யில், டாடா மோட்டார்ஸ் அதன் பயணிகள் வாகனங்களை BS6 2.0 மற்றும் E20 பொருத்தமான இன்ஜின்ஸுடன் புதுப்பித்தது. நெக்ஸான், சஃபாரி, பஞ்ச், ஹேரியர், டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராண்டின் வாகன போர்ட்ஃபோலியோ, திருத்தப்பட்ட எமிஷன் விதிமுறைகளுக்கு முற்றிலும் இணங்குகிறது.
இதற்கிடையில், டாடா இந்த ஆண்டு 2023 ஹேரியர் மற்றும் சஃபாரியையும் அறிமுகப்படுத்தியது. ரெட் டார்க் எடிஷனுடன், இந்த இரண்டு எஸ்யுவிஸும் இப்போது பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ஏடாஸ் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
கியா
கியா கார்ஸ்க்கான BS6 ஃபேஸ் 2 மேம்படுத்தல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. கியா தனது கார்ஸை ஆர்டிஇ விதிமுறைகளுக்கு இணங்கச் செய்யும் அதே வேளையில், செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் ஆகியவற்றின் கியர்பாக்ஸ் மற்றும் அம்சப் பட்டியலையும் திருத்தியுள்ளது. இந்த கார்ஸின் அனைத்து டீசல் பதிப்புகளும் இப்போது ஐஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதேசமயம் 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் புதிய 1.5-லிட்டர் டர்போ மோட்டருக்கு வழி வகுக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, கியா கார்னிவலுக்கு BS6 2 அப்டேட் தவிர்க்கப்பட்டது, இதனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் உடனடி வெளியீட்டைக் குறிக்கிறது.
ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் வர்டஸ் 1.0-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ஸ் BS6 2 விதிமுறைகளுக்கு இணங்கச் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல்ஸும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்ஸுடன் வழங்கப்படுகின்றன, மேலும் ஏப்ரல் 2023 முதல், இதன் விலை ரூ.35,000 வரை உயரும்.
ரெனோ
ரெனோ இந்தியா பிப்ரவரி 2023 யில் ட்ரைபர், க்விட் மற்றும் கைகர் மாடல்ஸை BS6 2 இன்ஜின்ஸுடன் புதுப்பித்தது. குறிப்பிடப்பட்ட அனைத்து கார்ஸும் 1.0-லிட்டர் பெட்ரோல் அல்லது 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ஸால் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்ஸுடன் இயக்கப்படுகின்றன. இதனுடன், ரெனோ இந்த மாடல்ஸின் பாதுகாப்பு அம்சங்களையும் திருத்தியுள்ளது, அதன் விவரங்களை இங்கே படிக்கலாம்.
கார் தயாரிப்பாளர்கள் இன்னும் BS6 ஃபேஸ் 2 மாடல்ஸை வெளியிடயிருக்கும்
மாருதி சுஸுகி
வேகன் ஆர், செலிரியோ, எஸ் -பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ K10 ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பிராண்டின் K10C 1.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் BS6 ஃபேஸ் 2 இணக்கமானது என்பது ஏற்கனவே தெரிந்ததாகும். இருப்பினும், மாருதி சுஸுகி, அதன் மற்ற பவர்ட்ரெயின்ஸ்க்கான BS6 2 மாற்றத்தை இன்னும் அறிவிக்கவில்லை. 14 மாடல்ஸ் அதன் நிலையான நிலையில், மாருதி சுஸுகியின் சமீபத்திய சேர்த்தல்கள் 2023 இக்னிஸ் மற்றும் பிரெஸ்ஸா சிஎன்ஜி ஆகும்.
இப்போது, மாருதி ஃப்ரோன்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகியவை வரும் மாதங்களில் மார்க்கெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ப்ரொஃபைலில் உள்ள மற்ற மாடல்ஸும் BS6 2 தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மஹிந்திரா
BS6 2 கம்ப்ளைன்ட் மஹிந்திரா மாடல்ஸின் விவரங்கள் ஏற்கனவே வெளிவந்துயிருந்தாலும், இந்திய கார் தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். மஹிந்திராவில் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்ட்ரெயின்ஸுடன் வழங்கப்படும் எஸ்யுவிஸ் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்போது மஹிந்திரா அதன் அனைத்து மாடல்ஸின் விலைகளையும் திருத்தியுள்ளது, BS6 2 மற்றும் ஆர்டிஇ விதிமுறைகள் மேம்படுத்தல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா
டொயோட்டா தனது BS6 ஃபேஸ் 2 மாடல்ஸை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது, பிராண்ட் கர்நாடகாவில் உள்ள பிராண்டின் ஆலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைகிராஸ், ஃபார்ச்சூனர், க்ளான்ஸா, ஹைரைடர் மற்றும் ஹைலக்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இனோவா க்ரிஸ்டா டீசலின் VX மற்றும் ZX வேரியண்ட்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகளையும் இந்த பிராண்டுடன் வெளிப்படுத்தும் வகையில் விரைவில் அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா
BS6 ஸ்டேஜ் 2 க்கான அதன் புதுப்பிப்பில், ஹோண்டா அதன் மாடல்ஸைக் குறைக்கும். ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்-வி மற்றும் ஃபோர்த்-ஜெனரேஷன் சிட்டி ஆகியவை விலகி, புதிய சிட்டி மற்றும் அமேஸ் செடான்ஸுடன் வாகன உற்பத்தியாளர் மார்க்கெட்டில் தனது போரைத் தொடரும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்ஸ்க்கு போட்டியாக புதிய நடுத்தர அளவிலான எஸ்யுவியை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதால், இது விரைவில் நன்றாக மாறும். ஹோண்டா எஸ்யுவி வரும் மாதங்களில் அறிமுகமாகும் மற்றும் டீலர்ஸ் அதற்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்