- இந்தியாவில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை அக்டோபர் 2023 இல் அறிவிக்கப்படும்
- புதிய எக்ஸ்டீரியர் டிசைன் மற்றும் புதிய ஃபீச்சர்ஸைப் பெறும்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் வெளியிட்டு மற்றும் லான்ச்
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை செப்டம்பர் 2023 இல் இந்தியாவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில், பண்டிகைக் காலத்தில் அதன் வெளியீடு மற்றும் விலை அறிவிப்பு வெளியாகலாம். ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை ஷாட்ஸ் மற்றும் புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.
2023 டாடா நெக்ஸான் ஸ்பை ஷாட்ஸ்: அவை என்ன வெளிப்படுத்துகிறது
ஸ்பை ஷாட்ஸில் காணப்படுவது போல், ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் ஒரு புதிய தோற்றத்தை பெறும், அதில் லைட் பார் கொண்ட புதிய கிரில், கிரில்லின் இருபுறமும் எல்இடி டிஆர்எல்ஸுடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், செங்குத்தாக அடுக்கப்பட்ட புதிய ஹெட்லைட் க்ளஸ்டர், புதிய ஏர் இன்டேக், ஃப்ரண்ட் பம்பரில் ஒரு கேமரா, 360 டிகிரி கேமரா போன்ற ஃபிச்சர்ஸ்ஸை பெறும்.
ரியரில், இந்த சப்-ஃபோர் எஸ்யுவி பிளாக் இன்சர்ட்ஸ், புதிய எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் பூட் லிட்டில் இணைக்கப்பட்ட லைட் பார் ஆகியவற்றைக் கொண்ட புதிய பம்பரைப் பெறும். புதிய 16-இன்ச் அலோய் வீல்ஸூம் கிடைக்கும்.
ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானின் இன்டீரியர் ஃபீச்சர்ஸ்
அப்டேடட் நெக்ஸானின் இன்டீரியர்,ஒரு விரிவான புதுப்பிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டாஷ்போர்டு, மேலும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்கிரீனுடன் கூடிய புதிய ஃப்ளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், பர்பிள் அப்ஹோல்ஸ்டரி, புதிய டிசைன் கொண்ட சென்டர் கன்சோல் மற்றும் புதிய ஏசி பேனல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானின் இன்ஜின் விவரங்கள்
இது முந்தைய மாடலில் இருந்த அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். அதன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் புதிய இன்ஜினுடன் மாற்றப்படும், இது இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்