- அட்டோ 3 ஆனது ஏஆர்ஏஐயிலிருந்து ஹோமோலோகேஷன் சான்றிதழைப் பெற்றது
- அக்டோபர் 2022 இல் லான்ச் செய்யப்பட்டது
நீங்கள் பிஒய்டி அட்டோ 3 ஐ முன்பதிவு செய்து, அதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தால், இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவருக்கு ஏஆர்ஏஐ ஹோமோலோகேஷன் சான்றிதழைப் பெற்றுள்ளதால், உங்கள் முன்பதிவுகளின் சிக்கல் விரைவில் குறையும். அதாவது ஹோமோலோகேட்டட் அல்லாத கார்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 2500 கார்கள் என்ற வரம்பு நீக்கப்பட்டு, அதிக கார்களை இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் பிஒய்டி எஸ்கேடி மாடலிருந்து சிகேடி மாடலுக்கு மாற்றுவதன் மூலம் காரின் விலைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் விலைக் குறைப்பு குறைந்த விவரக்குறிப்பு வேரியன்ட்டின் மூலம் இருக்கும் என்று நம்புகிறோம், இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே எங்கள் வெப்சைட்டில் உள்ளன. வரவிருக்கும் வேரியன்ட் தற்போதைய மாடலின் அதே பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது 264 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. ஃபுல்லி லோடெட் அட்டோ 3 ஒரு முழு சார்ஜில் 512 கிமீ டிரைவிங் ரேஞ்ச் தரும் என்று கூறப்படுகிறது.
அட்டோ 3க்கு தற்போது போட்டியாளர் இல்லை, ஆனால் இது ஹூண்டாய் தூக்ஸன், எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகியவற்றின் ஐசிஇ வெர்ஷனோடு போட்டியிடுகிறது, இருப்பினும் இவை அனைத்தும் மிகப் பெரிய வாகனங்கள். அடுத்த வருடத்தில் டாடா மற்றும் மஹிந்திரா போன்ற பிராண்டுகள் அட்டோ 3க்கு போட்டியாக புதிய இவிகளை அறிமுகப்படுத்தலாம் என்று நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்