- உலகில் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்
- இது 1000Nm டோர்க்கை உருவாக்குகிறது
பிஎம்டபிள்யூ இந்தியா தனது சொகுசு எஸ்யுவியான XM இன் மற்றொரு ஸ்போர்ட்டி வெர்ஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிஎம்டபிள்யூ XM லேபிள் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ. 3.15 கோடி (எக்ஸ்-ஷோரூம்). இது ஸ்டாண்டர்ட் XM மாடலை விட தோராயமாக ரூ. 55 லட்சம் விலை அதிகம். சுவாரஸ்யமாக, உலகம் முழுவதும் 500 யூனிட்கள் மட்டுமே விற்கப்படும், அதில் இந்தியாவிற்க்கு ஒரே ஒரு யூனிட் மட்டுமே வழங்கப்படும்.
ரெட் அக்செண்ட் மற்றும் பிளாக் ஃபினிஷில் ஸ்டாண்டர்ட் XM இலிருந்து பிஎம்டபிள்யூ XM லேபிளின் தோற்றத்தை வேறுபடுத்துகின்றன. இதில் கிட்னி கிரில், விண்டோ லைன், அலோய் வீல்ஸ் மற்றும் ரியர் டிஃப்பியூசரைச் சுற்றி ரெட் அக்செண்ட் பார்க்க முடியும். கூடுதலாக, பிஎம்டபிள்யூ அதன் சிக்னேச்சர் ஃப்ரோஜென் கார்பன் பிளாக் நிறம் மற்றும் 22-இன்ச் அலோய் வீல்ஸ் அதை இன்னும் ஸ்டைலாக மாற்றியுள்ளது.
ரெட் மற்றும் பிளாக் தீம் அதன் இன்டீரியர்க்கு ஒரு லக்சுரி உணர்வைத் தரும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களை உள்ளடக்கிய பெரிய 14.9-இன்ச் கர்வ்ட் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இது தவிர, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, மல்டி-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், அடாப்டிவ் M சஸ்பென்ஷன் மற்றும் போவர்ஸ் & வில்கின்ஸ் வழங்கும் 20-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்ற பல பிரீமியம் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ XM லேபிளில் 4.4 லிட்டர் V8 ட்வின்-டர்போ ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது, இதில் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 748bhp பவரையும், 1000Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த எஸ்யுவி ஆனது வெறும் 3.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட முடியும், மேலும் அதன் அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 250 கிமீ/மணிக்கு மட்டுமே.