- பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே கிடைக்கும்
- புதிய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
பிஎம்டபிள்யூ இந்தியா தனது சொகுசு எஸ்யுவியின் X7 இன் புதிய ஸ்பெஷல் எடிஷன்னான சிக்னேச்சர் வெர்ஷனனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் பெட்ரோல் xDrive40i வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது, இதன் விலை ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம்). இது ஸ்டாண்டர்ட் பெட்ரோல் வெர்ஷனை விட ரூ. 3 லட்சம் அதிக விலை கொண்டது மற்றும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
X7 சிக்னேச்சர் எடிஷனில் அற்புதமான இரண்டு புதிய பிரத்யேக வண்ண விருப்பங்கள் மற்றும் கிரிஸ்டல் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. கூடுதலாக, இந்த எஸ்யுவி ஆனது ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல் டிஆர்எல்களுடன் கூடிய கிரிஸ்டல் ஹெட்லேம்ப்கள், அலுமினியம் சாடினைஸ் செய்யப்பட்ட ரூஃப் ரெயில்கள் மற்றும் 3D டெயில்லேம்ப்ஸ் போன்ற அசத்தலான டிசைன் அம்சங்களைக் கொண்டுள்ளது.
பிஎம்டபிள்யூ X7 சிக்னேச்சர் எடிஷன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களை இணைக்கும் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கூடுதலாக, 14 வண்ண விருப்பங்களில் ஆம்பியன்ட் லைட்டிங், ஹர்மன் கார்டனின் 16-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அல்காண்டரா பேக்ரெஸ்ட் குஷன்கள் போன்ற லக்சுரி அம்சங்களும் உள்ளன.
X7 சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது எய்ட்-ஸ்பீட் ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 375bhp பவரையும், 520Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த சக்திவாய்ந்த ட்யூனிங் மூலம், இந்த எஸ்யுவி வெறும் 5.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட இது உதவுகிறது.