- பிஎம்டபிள்யூ சென்னையில் தனது உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது
- இரண்டு வேரியண்ட்ஸ், நான்கு வண்ண விருபங்களில் கிடைக்கும்
கார்ஸ், குறிப்பாக லக்சுரி பிரிவில் உள்ள கார்ஸை அதன் பிரமாண்டமான முறையில் பரிசளித்து வெற்றியைக் கொண்டாடும் புதிய ட்ரெண்ட்டை தமிழ்த் திரையுலகம் உருவாக்கி வருகிறது.
கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் பிக்சர் ப்ரொடக்ஷனில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய மல்டி ஸ்டாரர் திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் கொண்டாடப்பட்ட மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதைத் தொடர்ந்து, படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு பிஎம்டபிள்யூ X7 காரை பரிசாக அளித்துள்ளார் கலாநிதி மாறன் அவர்கள்.
பிஎம்டபிள்யூ X7 வேரியண்ட்ஸ் & வண்ண விருப்பம்
பிஎம்டபிள்யூ X7 பற்றி பேசுகையில், இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸில், xDrive40i & xDrive40d இரண்டு வேரியண்ட்ஸில் இரண்டும் M ஸ்போர்ட்டில் கிடைக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிராண்டின் உற்பத்தி ஆலை நமது சென்னையில், உள்ளது. இது, கார்பன் பிளாக் மெட்டாலிக், மினெரல் ஒயிட் மெட்டாலிக், டிராவிட் க்ரே மெட்டாலிக், பிஎம்டபிள்யூ இண்டிவிஜுவல் டான்சானைட் ப்ளூ மெட்டாலிக் என நான்கு வண்ண விருபங்களில் பெறலாம். இதில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிஎம்டபிள்யூ இண்டிவிஜுவல் டான்சானைட் ப்ளூ மெட்டாலிக் நிறம் வழங்கப்பட்டது.
X7 இன் இன்ஜின் மற்றும் விலை விவரங்கள்
பிஎம்டபிள்யூ X7 சென்னையில் ரூ. 1.51 கோடி முதல் ரூ. 1.54 கோடி வரை ஆன்-ரோடு விலையில் உள்ளது. பிஎம்டபிள்யூ X7 xDrive40i M ஸ்போர்ட் என்பது 3.0-லிட்டர் சிக்ஸ்-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும், இது 376bhp மற்றும் 520Nm டோர்க்கை வெளிப்படுத்தும். மறுபுறம், X7 xDrive40d M ஸ்போர்ட் ஆனது 335bhp மற்றும் 700Nm பீக் டோர்க்கை வெளிப்படுத்தும் 3.0-லிட்டர் சிக்ஸ்-சிலிண்டர் டீசல் இன்ஜினைப் பெறுகிறது. இரண்டு இன்ஜின்ஸும் பிஎம்டபிள்யூவின் xDrive ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வீல்ஸ்க்கு சக்தியை அனுப்பும் எயிட்-ஸ்பீட் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.