- இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும்
- இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 302 கிமீ ஆகும்
பிஎம்டபிள்யூ அதன் முதல் M4 CS மாடலை இந்தியாவில் ரூ. 1.89 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது. இது ஒரு சிபியு யூனிட்டாக இந்தியாவிற்க்கு கொண்டு வரப்படும். இந்த காருக்கான முன்பதிவு அங்கீகரிக்கபட்ட பிஎம்டபிள்யூ ஷோரூம்களில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
எக்ஸ்டீரியர்
எக்ஸ்டீரியரைப் பற்றி பேசுகையில், M4 CS ஆனது மஞ்சள் நிறமுள்ள டிஆர்எல்களை பெறுகிறது. கிட்னி கிரிலில் ரெட் அவுட்லைன் மற்றும் 19-இன்ச் ப்ரான்ஜ் வீல்ஸைக் கொண்டுள்ளது. டெயில்கேட்டில் M4 CS க்கான லோகோவை பெறுகிறது. இது முழுமையாக கார்பன் ஃபைபர் பாடி என்பதால் இதன் எடையில் 20 கிலோ வரை குறைந்துள்ளது.
இன்டீரியரில்
இன்டீரியரில், இது M கார்பன் பக்கெட் சீட்ஸ், ஒரு எம் அல்காண்டாரா ஸ்டீயரிங் வீல், பிஎம்டபிள்யூவின் கர்வ்ட் டிஸ்ப்ளே 14.9-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், கார்பன் ஃபைபர் சென்டர் கன்சோல், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், ஹர்மான் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற அப்டேடெட் அம்சங்களுடன் கிடைக்கிறது
இன்ஜின்
இந்த காரில் 3.0-லிட்டர், சிக்ஸ்-சிலிண்டர் இன்லைன் இன்ஜினுடன் எய்ட்-ஸ்பீட் எம் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 543bhp மற்றும் 650Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் காரை 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் அடைய உதவுகிறது, அதே நேரத்தில் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 302 கிமீ ஆகும். இந்த காரின் இன்ஜினில், பல்வேறு டிரைவிங் மோட்களும் உள்ளது.
போட்டியாளர்
பிஎம்டபிள்யூ M4 CS ஆனது ஆடி RS5 மற்றும் வரவிருக்கும் C 63 S இ-பர்ஃபார்மன்ஸ் உடன் போட்டியிடும்.