- ஃபுல்லி லோடெட் சிங்கிள் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது
- 635 கிமீ டிரைவிங் ரேஞ்சை தருகிறது
பிஎம்டபிள்யூ இந்தியா தனது புதிய iX xDrive50 ஐ ரூ. 1,39,50,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யுவி ஃபுல்லி லோடெட் சிங்கிள் வேரியன்ட்டில் கிடைக்கிறது மற்றும் இது சிபியு வழியே இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.
இந்த எலக்ட்ரிக் எஸ்யுவியில் ஃப்ரீஸ்டாண்டிங் 14.9-இன்ச் கர்வ்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 18-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் சரவுண்ட்-வியூ கேமரா போன்ற அம்சங்கள் உடன் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ iX xDrive50 ஆனது 111.5kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது டூயல்-மோட்டார் செட்-அப் உடன் வழங்கப்படுகிறது, இது 516bhp மற்றும் 765Nm டோர்க்கையும் உருவாக்குகிறது மற்றும் ஒரு முழு சார்ஜில் 635 கிமீ வரை டிரைவிங் ரேஞ்ச் வழங்குவதாகக் கூறப்படுகிறது. 195 kW வரை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 35 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.