- 30 மாடல்ஸுக்கு மேல் சோதனை செய்வதற்கான கோரிக்கை பெறப்பட்டது
- வாகனத்தின் நிலை மற்றும் குழந்தைகளுக்கான சேஃப்டி ரேட்டிங் வழங்கப்படும்
- இதன் செயல்முறை க்ளோபல் என்கேப் போலவே இருக்கும்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (மோர்த்) க்ளோபல் என்கேப் உடன் இணைந்து பாரத் என்கேப் (பாரத் நியூ கார் அஸ்ஸெஸ்மெண்ட் ப்ரோக்ராம்) தொடங்கியுள்ளது. இது அக்டோபர் 1, 2023 முதல் செயல்படுத்தப்படும் மற்றும் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட் (AIS) 197 இன் கீழ் டெஸ்ட் செய்யப்படும்.
பாரத் என்கேப் டெஸ்டிங் சிஸ்டம்
அனைத்து வாகனங்களும் AIS 197 இன் படி மூன்று முறை கிராஷ் டெஸ்ட் செய்யப்படும்.
ஃப்ரண்ட் தாக்கவிளைவு டெஸ்ட்
ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் ஃப்ரண்டல் இம்பாக்ட் டெஸ்ட் (ஓடிபிஎஃப்ஐடீ) என்பது கிராஷ் டெஸ்ட் ஆகும், இதில் கார் 64 கி.மீ வேகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சோதிக்கப்படும். டிரைவருடன் 1.5 முதல் 3 வயது வரையிலான இரண்டு டம்மிஸை பின் சீட்ஸில் வைக்கப்படும்.
சைட் தாக்கம் மற்றும் போல் சைட் தாக்கம் டெஸ்ட்
இது ஒரு மணி நேரத்திற்கு 50 கி.மீ முதல் 29 கி.மீ வேகத்தில் சோதனை செய்யப்படும் மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் இது வெளிப்படுத்தும்.
க்ளோபல் என்கேப் போலவே, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் பயணிப்பவர்களுக்கு ஒன்று முதல் ஐந்து ஸ்டார் வரை மதிப்பிடப்படும்.
பாரத் என்கேப் பற்றிய முக்கியமான தகவல்கள்
பாரத் என்கேபின் கீழ் வாகனங்களைச் சோதிக்க, கார் உற்பத்தியாளர்கள் மத்திய அரசு நிறுவனத்தின் 70-A ஃபார்ம்மை நிரப்ப வேண்டும். இந்த நிறுவனம் வாகனங்களுக்கு ஸ்டார் மதிப்பீட்டை வழங்கும் மற்றும் அது அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.
பாரத் என்கேப் கீழ் சோதனை செய்யப்படுவதற்கான தகுதி
M1 பிரிவில் வரும் வாகனங்கள் இந்த கிராஷ் டெஸ்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும். மேலும், வாகனத்தின் எடை 3,500 கிலோ (3.5 டன்) அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்கள் என்ட்ரி லெவல் வேரியண்டாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்