கடந்த சில ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் எம்பீவி கார்ஸை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பல கார் உற்பத்தியாளர்கள் எஸ்யுவி செக்மெண்டில் வளர்ந்து வரும் சந்தையில் கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், இந்த பிராண்டுகளில் சில எம்பீவியை அறிமுகப்படுத்த ஆர்வம் கட்டுகின்றன. இந்த கட்டுரையில், 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ஏழு சீட்டர் கார்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
ரெனோ ட்ரைபர்
ரெனோ ட்ரைபர் தற்போது நாட்டிலேயே மிகவும் மலிவான ஏழு சீட்டர் கொண்ட மாடல்களில் ஒன்றாகும். இந்த எம்பீவி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஹேட்ச்பேக் அல்லது காம்பாக்ட் செடானின் பட்ஜெட்டில் ஏழு சீட்டர் கொண்ட காரை வாங்க விரும்பிய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த எம்பீவி தற்போது ஐந்து வேரியன்ட்ஸில் ரூ. 6.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது 1.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இதை பெறலாம்.
மாருதி சுஸுகி எர்டிகா
மாருதி சுஸுகி எர்டிகா தான் 'குறைந்த விலையில் அதிக இடம்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கார் மற்றும் வேகமாக வெற்றி பெற்ற காரில் ஒன்றாகும். ரூ. 5.89 லட்சம் ஆரம்ப விலையில் எல்யுவி (லைஃப் யூட்டிலிட்டி வெஹிக்கிள்) என்ற கோஷத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மூன்று ஃபேஸ்லிஃப்ட்களை பெற்றுள்ளது மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாருதி தயாரிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. மாருதி எர்டிகாவின் தற்போதைய ஆரம்ப விலை ரூ. 8.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பங்களிலும் கிடைக்கிறது.
கியா கேரன்ஸ்
கியா இந்தியா கேரன்ஸ் எம்பீவி’யை டிசம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தி 2022 இல் இந்தியாவில் லான்ச் செய்தது. மாருதி எர்டிகா மற்றும் XL6 ஆகிய கார்களுக்கு போட்டியாக, ப்ரீமியம் அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கார் தயாரிப்பு நிறுவனம் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீமியம், பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் ப்ளஸ், லக்ஸரி, லக்சுரி (O) லக்சுரி ப்ளஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்-லைன் ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இந்த கார் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் ரூ.10.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மஹிந்திரா பொலேரோ மற்றும் பொலேரோ நியோ
மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலேரோ நியோ ஆகியவை எம்பீவி அல்ல, ஆனால் ஏழு சீட்டர் உள்ளமைவு விருப்பத்தில் வருகின்றன. இரண்டும் டீசல் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கின்றன. TUV300 க்கு பதிலாக பொலேரோ ஒரு ஆஃப்-ரோடராகவும் மற்றும் பொலேரோ நியோ நகரங்களுக்கானது. பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகியவை முறையே ரூ.9.79 லட்சம் மற்றும் ரூ.9.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்