- இரண்டு பாடி ஸ்டைல்ஸில் கிடைக்கும்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 600கி.மீ வரை செல்லும்
கடந்த வாரம் ஆடி இந்தியா புதிய Q8 இ-ட்ரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான்ஸ்க்கான முன்பதிவுகளை ரூ.5,00,000 டோக்கன் தொகையில் தொடங்கியது. நாட்டில் இப்போது, வாகன உற்பத்தியாளர் மாடல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.1.14 கோடி (எக்ஸ்-ஷோரூம்).
ஆடி Q8 இ-ட்ரான் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்
ஆடி Q8 இ-ட்ரான் இரண்டு வேரியண்ட்ஸில் இருக்கலாம் - இந்த எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் ஒன்பது எக்ஸ்டீரியர் மற்றும் மூன்று இன்டீரியரில் வழங்கப்படும். எக்ஸ்டீரியர் நிறங்களில் மடிரா ப்ரௌன், க்ரோனோஸ் க்ரே, க்ளேசியர் ஒயிட், மிதோஸ் பிளாக், ப்ளாஸ்மா ப்ளூ, சோனிரா ரெட், மேக்னட் க்ரே, சியாம் பெய்ஜ் மற்றும் மன்ஹாட்டன் க்ரே ஆகியவை அடங்கும். மறுபுறம் இன்டீரியர் தீம், ஒகாபி ப்ரௌன், பேர்ல் பெய்ஜ் மற்றும் பிளாக் ஆகியவை அடங்கும்.
ஆடி Q8 இ-ட்ரான் பேட்டரி கபாஸிட்டி
ஆடி Q8 இ-ட்ரான் 95kWh மற்றும் 114kWh என இரண்டு பேட்டரி பேக்கில் வழங்கப்படுகிறது. 95kWh ஆனது, 340bhp மற்றும் 664Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது, பின்னர் 114kWh 408bhp மற்றும் அதே 664Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது. 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பயன்படுத்தி, பேட்டரிஸை வெறும் 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து, 600 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.
ஆடி Q8 இ-ட்ரான் விலைகள்
வேரியண்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
ஆடி Q8 50 இ-ட்ரான் | ரூ. 1,13,70,000 கோடி |
ஆடி Q8 50 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் | ரூ. 1,18,20,000 கோடி |
ஆடி Q8 55 இ-ட்ரான் | ரூ. 1,26,10,000 கோடி |
ஆடி Q8 55 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் | ரூ. 1,30,60,000 கோடி |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்