- மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இன் V8 இன்ஜினை பெறும்
- இவற்றின் டெலிவரி 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தொடங்கும்
அஸ்டன் மார்டின் இரண்டு கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கூபே, வான்டேஜ் ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரிட்டிஷ் சூப்பர் காரின் விலை ரூ. 3.99 கோடி (எக்ஸ்-ஷோரூம்). புதுப்பிக்கப்பட்ட வான்டேஜ் ஆனது அப்டேடெட் எக்ஸ்டீரியர் ஸ்டைலிங், மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மற்றும் புதிய இன்டீரியரைப் பெறுகிறது. இதன் டெலிவரிகள் 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தொடங்கும்.
வான்டேஜ் ஆனது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இலிருந்து பெறப்பட்ட 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினை பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 656bhp மற்றும் 800Nm பீக் டோர்க்கை உருவாக்க எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் வெளியீட்டின் மூலம், வான்டேஜ் ஆனது 0-100 கி.மீ வேகத்தை வரை வெறும் 3.5 வினாடிகளிலும் இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 325 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.
டிசைனைப் பொறுத்தவரை, புதிய வான்டேஜ் சூப்பர்கார் ஃப்ரண்ட்டில் ஆக்ரோஷமான தோற்றத்தைப் பெறுகிறது. இது பம்பரின் இருபுறமும் வெர்டிகல் ஏர்டேம்ஸ் மற்றும் ஹை-பர்ஃபார்மன்ஸ் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸைப் பெறுகிறது. மேலும் என்னவென்றால், டூ-டோர் கூபேயில் திருத்தப்பட்ட ஃபெண்டரில் காற்று குழாய்கள், சற்று மறுவடிவமைக்கபட்ட ரியர் பம்பர், டிஃப்பியூசர் மற்றும் சாடின் சில்வர் கலர் ஃபினிஷ் கொண்ட 21-இன்ச் அலோய் வீல்ஸ் உள்ளன.
புதிய வான்டேஜின் கேபினில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது முற்றிலும் மறுவேலை செய்யப்பட்ட காக்பிட்டுடன் புதிய இன்டீரியர் நிறத்தைக் கொண்டுள்ளது. இன்டீரியர் மெர்சிடிஸில் இருக்கும் இன்டீரியர் போல் தோற்றமளிக்கும் நிலையில், புதிய வான்டேஜ் சொகுசு ஸ்போர்ட்ஸ் காரில் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. புதிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட் மற்றும் 3D லைவ் மேப்பிங் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. மேலும், இது 15-ஸ்பீக்கர் கொண்ட போவர்ஸ் & வில்கின்ஸ் மியூசிக் சிஸ்டம், ஒரு புதிய ஸ்டீயரிங், ஃபிசிக்கல் டோகிள்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பவர்ட் சீட்ஸ் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்