- ஃப்ரண்ட் ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது
- ரியர் டோரில் ஹேண்டல்ஸ் பொருத்தப்பட்டுள்ளன
மாருதி சுஸுகி தனது முதல் இவி கார் eVX ஐ பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் காட்சிப்படுத்தியது. முன்னதாக இந்த மாடல் டெஸ்ட்டிங் போது பல முறை காணப்பட்டது. இந்த எலக்ட்ரிக் எஸ்யுவி மீண்டும் டெஸ்ட்டிங்க்கு உட்படுத்தப்பட்டுள்ளது, இதில் இது பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாருதி eVX இன் இந்த டெஸ்ட் மாடல் முழுமையாக மூடப்பட்டுள்ளது. ஆனால் இது இருந்தபோதிலும், முன் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட், ஃப்ரண்ட் கேமரா, ஓஆர்விஎம்க்கு கீழே கேமரா, ரியர் டோர் பில்லரில் பொருத்தப்பட்ட ஹேண்டல்ஸ் மற்றும் ஐஆர்விஎம்க்கு பின்னால் பொருத்தப்பட்ட கேமரா போன்ற அம்சங்கள் தெரியவந்தது. இந்த கேமரா அநேகமாக ஏடாஸ் டெக்னாலஜிகாகப் பயன்படுத்தப்படலாம்.
இது தவிர, எக்ஸ்டென்டெட் ரூஃப் ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர் மற்றும் கனெக்டெட் டெயில்லைட் அமைப்புடன் இன்டெக்ரேட்டட் ஹை-ஸ்டாப் லைட் போன்ற அம்சங்கள் அதன் ரியரில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பெரிய மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ் eVX இல் சேர்க்கப்படும்.
இந்த எஸ்யுவியின் படங்களில், இதில் ஒரு பெரிய ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கும். eVX ஆனது ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர், எச்யுடி டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்ட் டிரைவர் சீட், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் புதிய ஸ்டீயரிங் ஆகியவற்றுடன் வழங்கப்படும்.
அதன் பேட்டரி பேக் மற்றும் பிற அம்சங்களைப் பற்றி பேசினால், மாருதி eVX இல் 60kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும், இது 550 கிமீ டிரைவிங் ரேஞ்ச்ஜைத் தரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்