- ப்ரொடக்ஷன்-ரெடி வடிவத்தில் காணப்படுகிறது
- AWD உடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்திரா அதன் XUV700 இன் எலக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்த உள்ளது, இது உற்பத்திக்கு தயாராக உள்ளது. இந்த மாடலின் பெயர் XUV.e8 என்று உங்களுக்குத் தெரிவிகிறோம், இது டிசைனின் அடிப்படையில் XUV700 ஐப் போலவே இருக்கும், ஆனால் சில மாற்றங்களுடன் வரும்.
இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யுவியின் ஃப்ரண்ட்டில் டி-வடிவ எல்இடி டிஆர்எல்கள், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பிளேங்க்-ஆஃப் கிரில் உள்ளது. மேலும் ஏடாஸ் ரேடார் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் இருக்கும்.
ரியரில், XUV700 வடிவமைப்பைப் போலவே உள்ளது, ஆனால் ஃப்யூல் கேப்க்கு பதிலாக, சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியரில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது, இதில் த்ரீ ஸ்கிரீன் டாஷ்போர்டு அமைப்புடன் பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் கிடைக்கும்.
XUV.e8 ஆனது டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, பவர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் திருத்தப்பட்ட சென்டர் கன்சோல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இது தவிர, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம்கள் மற்றும் சிறந்த மியூசிக் சிஸ்டமும் சேர்க்கப்படும்.
மஹிந்திரா XUV.e8 AWD உடன் வரும், இதில் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும். இந்த எஸ்யுவியின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள், பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யுவி பிரிவில், எதிர்காலத்தில் மற்ற எலக்ட்ரிக் வாகனங்களுடன் போட்டி போடும் வகையில் கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்