- இது மஹிந்திரா XUV400க்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுருக்கும்
- இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்படும்
BE.05, XUV.e8 மற்றும் XUV.e9 ஆகிய மூன்று வரவிருக்கும் ஃபுல் எலக்ட்ரிக் மாடல்களையும் மஹிந்திரா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. மூன்று மாடல்களும் மும்பையில் சோதனை செய்வதை சமீபத்தில் பார்த்தோம். BE.05 என்பது மிகச்சிறிய மாடலாகும், இது உற்பத்திக்கு தயாராக உள்ள அவதாரத்தில் காணப்படுகிறது மற்றும் அறிமுகப்படுத்தப்படும் போது டாடா கர்வ்க்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
படங்களில் பார்ப்பது போல், BE.05 ஆனது தடிமனான ஸ்குயர் வீல் அர்ச்செஸ் மற்றும் ஸ்கூப்-அவுட் பானட் ஆகியவற்றுடன் ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. லைட் பாரில் இணைக்கப்பட்ட மெல்லிய எல்இடி டிஆர்எல்ஸ், பெரிய ஏர் இன்லெட்ஸ் மற்றும் ஃப்ரண்ட்டில் பிளாக்-ஆஃப் கிரில் ஆகியவற்றுடன் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது.
இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் ஸ்பிளிட் ரியர் ஸ்பாய்லர், ரேக்ட் ரியர் விண்ட்ஸ்கிரீன் மற்றும் சி-வடிவ எல்இடி டெயில்லேம்ப்ஸ் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்களுடன் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, அதன் டிசைன் சிறப்பம்சங்கள் பூட் லிப், பெரிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள் மற்றும் XUV.e9 போன்ற பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ், இன்டெக்ரேட்டட் ரூஃப் லைன்ஸ் ஆகியவை அடங்கும்.
முந்தைய ஸ்பை புகைப்படங்கள் இந்த கூபே கிராஸ்ஓவரின் கேபினனை வெளிப்படுத்தியது. BE.05 இன் இன்டீரியர், டிரைவருக்கான டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் அமைப்பை வழங்குகிறது, இது இந்த செக்மெண்ட்டில் காணப்படும் மற்ற மாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த மாடலில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான டூயல் ஸ்கிரீன், ஸ்டோரேஜ் உடன் கூடிய ஃப்லோட்டிங்க் சென்டர் கன்சோல், இல்லுமினேட்டட்'BE' லோகோ மற்றும் ஸ்ட்ராப்-ஸ்டைல் கிராப் ஹேண்ட்ல்ஸுடன் ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்