- EV3 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் வரை டிரைவிங் ரேஞ்சை தரும்
- வரவிருக்கும் கியா EV3 ஸ்டாண்டர்ட் மற்றும் ஜிடீ-லைன் வெர்ஷனில் கிடைக்கும்
கியா நிறுவனம் உலகளாவிய என்ட்ரி லெவலான ஃபுல் எலக்ட்ரிக் எஸ்யுவி, EV3 ஐ வெளியிட்டது. இந்த 5-சீட்டர் எஸ்யுவி, ஸ்டாண்டர்ட் மற்றும் ஜிடீ-லைன் ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில், ஒன்பது வெளிப்புற வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. EV3 மாடலைப் பார்க்கும்போது, வடிவமைப்பு, கிளாஸ்-லீடிங் கேபின் ஸ்பேஸ், அம்சங்கள் மற்றும் டிரைவிங் ரேஞ்ச் ஆகியவற்றின் அடிப்படையில் இது EV9 ஐ போலவே உள்ளது.
எக்ஸ்டீரியரில், கியா EV3 சிக்னேச்சர் கியா இவி தோற்றத்துடன் ஒரு பிளாக்-ஆஃப் கிரில், எல்-வடிவ எல்இடி டிஆர்எல், டைகர்-நோஸ் ஃபேஷியா, க்யூபிகல்-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் கீழ் பம்பரில் பரந்த ஏர்-டேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பு முதன்மையான EV9 எஸ்யுவி போலவே இருக்கும்.
காரின் சைட் ப்ரோஃபைலைப் பார்க்கும்போது, EV3 ஸ்குயர்-ஆஃப் வீல் அர்செஸ், வெள்ளை நிறச் இன்சர்ட்ஸுடன் கூடிய கருப்பு நிற அலோய் வீல்ஸ், பிளாக்-அவுட் பில்லர்ஸ், ஃப்ளஷ் ஃபிட்டிங் ஃப்ரண்ட் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் சி-பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
காரின் பின்புறத்தைப் பார்க்கும்போது, கியா EV3 ஆனது எல்-வடிவ எல்இடி டெயில்லேம்ப்ஸ் இரு முனைகளிலும் எக்ஸ்டெண்ட் செய்யப்பட்டிருக்கும், கருப்பு உறையுடன் கூடிய ஒரு பெரிய பம்பர், ஒரு ரூஃப் ஸ்பாய்லர், ஒரு ஷார்க்-ஃபின் ஆண்டெனா, சென்சார்ஸ் கொண்ட ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த எஸ்யூவி அவென்டுரின் கிரீன் மற்றும் டெரகோட்டா ஆகிய இரண்டு சிறப்பு வண்ணங்கள் உட்பட மொத்தம் ஒன்பது வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன.
இன்டீரியரில், EV3 கேபினில் ஆஃப்-செட் கியா லோகோவுடன் த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேஸ், ஸ்டோரேஜுடன் கூடிய ஃபிலோட்டிங்க் சென்டர் கன்சோல், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் ஏடாஸ் போன்ற அம்சங்களைக் இதில் காணலாம். ஸ்டோரேஜை பொறுத்தவரை, கியா EV3 ஆனது 460 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 25 லிட்டர் டிரங்க் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்டீரியர் வண்ணங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் ஏர், எர்த் மற்றும் வாட்டர் ஆகியவற்றின் எலிமென்ட்ஸால் ஈர்க்கப்பட்ட சட்டல் க்ரே, வார்ம் க்ரே, ப்ளூ மற்றும் ஜிடீ-லைன் வேரியன்ட் பிரத்யேக ஓனிக்ஸ் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.
டைமென்ஷன்ஸை பொறுத்தவரை, கியா EV3 ஆனது 4,300மிமீ நீளம், 1,850மிமீ அகலம் மற்றும் 1,560மிமீ உயரம் மற்றும் 2,680மிமீ வீல்பேஸ் கொண்டது. இந்த எலக்ட்ரிக் எஸ்யுவி ஆனது 'பிராண்ட் இ-ஜிஎம்பி ஆர்கிடெக்சர்' அடிப்படையில் ஃப்ரண்ட்-வீல் டிரைவ் டிரைவ்ட்ரெயின் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் இது 58.3kWh மற்றும் 81.4kWh யூனிட் என இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 600 கிலோமீட்டர் (WLTP-சைக்கிள்) டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும். பர்ஃபார்மன்ஸ்ஸை பொறுத்தவரை, 283Nm பீக் டோர்க்கையும், இது வெறும் 7.5 வினாடிகளில் 0 -100 வேகத்தை எட்டிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்