- ஏற்கனவே 240 சார்ஜர் பாயிண்ட்கள் நிறுவப்பட்டுள்ளன
- மேலும் 8,500 சார்ஜர்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
மும்பையில் 8,500 இவி சார்ஜர்களை நிறுவுவதாக அதானி எலெக்ட்ரிசிட்டி இன்று அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த சார்ஜர்கள் பொருத்தப்படும். இதனுடன், நிறுவனம் 'ஷேர் சார்ஜ்' முயற்சியையும் தொடங்கியுள்ளது. இது இவி கார் சார்ஜிங் பிரச்சனையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
ஆனால், இதற்கான காலக்கெடு குறித்த தகவலை அந்நிறுவனம் அரிவிக்கவில்லை. இந்த இவி சார்ஜிங் போர்ட்கள் மும்பை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 4,000 ஹவுசிங் சொசைட்டிகளில் 8,500 இடங்களில் நிறுவப்படும். இந்த சார்ஜர் மூலம் காரை சார்ஜ் செய்ய ஏழு மணி நேரமும், பைக்கை நான்கு மணி நேரத்திலும் சார்ஜ் செய்யலாம்.
அதானி மற்றும் டாடா பவர் 'ஷேர் சார்ஜ்' முயற்சியைத் தொடங்கியுள்ளன, இதன் கீழ் பல வாகன உரிமையாளர்கள் ஒரே சார்ஜிங் போர்ட்டைப் பயன்படுத்தலாம் மற்றும் அவர்களின் வசதிக்கேற்ப சார்ஜிங் நேரத்தையும் அமைக்கலாம். ஷேர் சார்ஜ் அதிகபட்ச சார்ஜிங் செலவைக் குறைக்கும் மற்றும் இவி கார்களின் விற்பனையை அதிகரிக்கும். கூடுதலாக, நீங்கள் மொபைல் அப்ளிகேஷன் மூலம் நேரடியாக சார்ஜ் செய்வதைக் கண்காணிக்கலாம் மற்றும் பணம் செலுத்தலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்