- தார் ஒவ்வொரு மாதமும் 10,000 முன்பதிவுகளைப் பெறுகிறது
- தற்போது இதற்கு 70 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட் உள்ளது
அக்டோபர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மஹிந்திரா தார் இந்திய சந்தையில் வலுவான பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இப்போது வரை, இந்த லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் நாட்டின் செக்மென்ட்டில் மிகவும் பிரபலமான எஸ்யுவிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தார் அதிக பிரபலம் மற்றும் அதிக தேவை காரணமாக, நவம்பர் மாதத்திற்குள் இன்னும் 76,000 யூனிட்ஸை டெலிவரி செய்யப்பட உள்ளது. இது தவிர, இந்த த்ரீ டோர் எஸ்யுவிக்கு கார் தயாரிப்பாளர் ஒவ்வொரு மாதமும் 10,000 முன்பதிவுகளைப் பெறுகிறார்.
மற்ற செய்திகளைப் பற்றி பேசுகையில், தாரின் தேவை அதிகரித்து வருவதால், நவம்பர் மாதத்தில் ஆர்டபிள்யூடி ஹார்ட்-டாப் டீசல் வேரியண்ட்க்கு 70 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது. மறுபுறம், அதன் பெட்ரோல் வேரியண்ட்டை வீட்டிற்கு கொண்டு வர முன்பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 22 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்கள் 4WD வேரியண்ட்டை வாங்க நினைத்தால், அவர்கள் 24 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
மஹிந்திரா தார் ஆர்டபிள்யூடி மற்றும் 4WD வேரியண்ட்ஸின் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது.இது 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 150bhp மற்றும் 300Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது.1.5-லிட்டர் டீசல் இன்ஜின் 117bhp மற்றும் 300Nm டோர்க்கையும் உருவாக்கும் அதே சமையம் இதன் 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் 130bhp மற்றும் 300Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்