- எக்ஸ்டர் ஜூலை 10, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- ஏழு வேரியண்ட்ஸில் கிடைக்கும்
ஹூண்டாய் இந்தியா எக்ஸ்டர் எஸ்யுவியை 10 ஜூலை 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த எஸ்யுவிக்கு போட்டியாக பஞ்ச், 11,000 முன்பதிவுகள் வந்துள்ளன. எஸ்யுவி ஏழு வேரியண்ட்ஸில் ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனை மற்றும் இன்ஜின் விருப்பங்கள்
மாதாந்திர விற்பனை அறிக்கையின்படி, ஹூண்டாய் ஜூலை 2023 இல் எக்ஸ்டர் இன் 7,000 யூனிட்ஸ்க்கு மேல் விற்பனை செய்துள்ளது. சில வேரியண்ட்ஸில் சிஎன்ஜி பொருத்தப்பட்ட 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும். பெட்ரோல் மோட்டார் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடனும் இது அடங்கும். மறுபுறம், சிஎன்ஜி எடிஷனில் 68bhp மற்றும் 95Nm டோர்க் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் வண்ண விருப்பங்கள்
ஹூண்டாய் நிறுவனத்தின் காம்பேக்ட்எஸ்யுவி ஆறு சிங்கிள் டோன் மற்றும் மூன்று டூயல் டோன் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் ஃபையரி ரெட், ஸ்டார்ரி நைட், டைட்டன் க்ரே, அட்லஸ் ஒயிட், ரேஞ்சர் காக்கி மற்றும் காஸ்மிக் ப்ளூ ஆகிய ஆறு சிங்கிள் டோனிலும் , அட்லஸ் ஒயிட் உடன் அபிஸ் பிளாக், ரேஞ்சர் காக்கி உடன் அபிஸ் பிளாக் ஆகியவை அடங்கும். பிளாக் மற்றும் காஸ்மிக் ப்ளூவுடன் மூன்று டூயல் டோன் வண்ண விருப்பங்களில் பிளாக் வழங்கப்படுகிறது.
2023 எக்ஸ்டர் ஃபீச்சர்ஸ்
ஃபீச்சர்ஸைப் பொறுத்தவரை, ஹூண்டாய் எக்ஸ்டர் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ் மற்றும் டூயல் டேஷ் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இது ஆறு ஏர்பேக்ஸ், டீபீஎம்எஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஃபுட்வெல் லைட்டிங், மெட்டல் பெடல்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்டர்ஸ் ஆகியவற்றை பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்