- இது பிப்ரவரி 2022 இல் லான்ச் செய்யப்பட்டது
- பெட்ரோல் வெர்ஷன்க்கு அதிக டிமாண்ட்
கியா இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான கேரன்ஸ் பிப்ரவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு இது இதுவரை 1.5 லட்சம் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளது, இது பிராண்டிற்கான ஒரு பெரிய சாதனையாகும். இந்த வாகனம், அதன் டிசைன் மற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜி அம்சங்களுடன், குடும்ப மூவர் செக்மெண்ட்டில் சிறந்த எம்பீவிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது மற்றும் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களிடையே பிடித்த வாகனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சன்ரூஃப், மல்டி டிரைவ் மோட்ஸ், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் கியா கனெக்ட் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இந்த பிரபலமான ஃபேமிலி மூவரின் மிட் மற்றும் டாப் வேரியன்ட்ஸை 50% வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்பது இதன் சிறப்பு.
கியா கேரன்ஸ் பல இன்ஜின் விருப்பங்களில் கிடைத்தாலும், பெட்ரோல் வேரியன்ட்க்கு 57% தேவையுடன் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் டீசல் வேரியன்ட் 43% விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கூடுதலாக, மேனுவல் டிரான்ஸ்மிஷன் மிகவும் விரும்பப்படுகிறது, 62% வாடிக்கையாளர்கள் அதைத் தேர்வு செய்கிறார்கள். சமீபத்தில் ஏப்ரல் 2024 இல், நிறுவனம் 6 சீட் கொண்ட காரின் வேரியன்ட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியது, இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கியா இந்தியாவின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரி திரு. மியுங்-சிக் சன் கூறுகையில், “கேரன்ஸ் இந்திய வாடிக்கையாளர்களிடையே ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் குடும்பக் காராக விரும்பப்படுகிறது. இது இப்போது எங்களின் மாதாந்திர உள்நாட்டு விற்பனையில் தோராயமாக 15% ஆகும், மேலும் வரும் ஆண்டுகளில் இதன் புகழ் மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரம் மற்றும் புதுமையான வாகனங்களைக் கொண்டு வர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
கியா நிறுவனம் சுமார் 17,000 யூனிட் கேரன்ஸ்ஸை ஏற்றுமதி செய்துள்ளது, இது சர்வதேச அளவில் கியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்