- ஃப்ரண்ட் மற்றும் ரியர் ப்ரோஃபைலில் புதிய டிசைன் கிடைக்கிறது
- இது உலகளவில் ஹைபிரிட் இன்ஜினுடன் கிடைக்கிறது
எம்ஜி மோட்டார் அதன் பிரபலமான எஸ்யுவி ZS இன் 2025 மாடலை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ZS இன் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் இரண்டிலும் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில், ZS ஒரு ஹைப்ரிட்+ வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. இந்தியாவில், இந்த எஸ்யுவி ZS இவி (ஆல்-எலக்ட்ரிக்) மற்றும் ஆஸ்டர் (பெட்ரோல் மாடல்) ஆகிய இரண்டு வெர்ஷனில் கிடைக்கும்.
2025 எம்ஜி ZS இன் எக்ஸ்டீரியரில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது ஒரு புதிய பெரிய கிரில், வெர்டிகல் ஏர் டம்ப்பர்கள் மற்றும் ஹெட்லேம்ப்ஸை இணைக்கும் அகலமான லைட் பார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது, இது ஒரு சிறந்த தோற்றத்தை அளிக்கிறது. எம்ஜி லோகோ இப்போது பானட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது, இது அதன் புதிய தோற்றத்தை மேலும் மேம்படுத்துகிறது.
புதிய அலோய் வீல்ஸை உள்ளடக்கிய அதன் சைட் ப்ரோஃபைல் சற்று திருத்தப்பட்டுள்ளது. ரியரில்,ZS (அல்லது ஆஸ்டர்) ஒரு புதிய பம்பர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்லைட்ஸ், டெயில்கேட்டில் புதிய லோகோ மற்றும் எக்ஸ்டென்டெட் ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பெறுகிறது. ரியர் வைப்பர் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் அவுட்லெட்ஸின் சில்வர் பேட்டர்ன் அதன் வடிவமைப்பை மேலும் மேம்படுத்துகிறது.
2025 ZS இன் இன்டீரியரிலும் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது ஒரு புதிய டாஷ்போர்டு செட்டப்பை பெறுகிறது, இதில் பெரிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏசி வென்ட்ஸ், புதிய ஸ்டீயரிங், ஏழு இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் புதிய கியர் லெவருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவை அடங்கும்.
இது தவிர, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், ஏடாஸ், வயர்லெஸ் சார்ஜர், டைப் சி சார்ஜிங் போர்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் ஆட்டோ ஹோல்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற பிரீமியம் அம்சங்களையும் ZS ஹைப்ரிட்+ பெறுகிறது.
எம்ஜி ZS ஹைப்ரிட்+ ஆனது 1.5 லிட்டர் ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 192bhp பவரை உருவாக்குகிறது, மேலும் இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.7 வினாடிகளில் எட்டிவிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்