- ஃப்ரண்ட்டில் பெரிய மாற்றங்களும், ரியரில் சிறிய மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன
- இந்தியாவில் அதன் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது
ஜீப் தனது புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சர்வதேச அளவில் சோதனை செய்து வருகிறது. இந்த மாடல் 2022 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இங்கே அசெம்பிள் செய்யப்படுகிறது, எனவே இதன் விலை குறைவாக உள்ளது. எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீபத்தில் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது, இது ஃப்ரண்ட்டில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 கிராண்ட் செரோக்கியின் ஃப்ரண்ட் மாற்றப்பட்டிருப்பதை ஸ்பை படங்கள் காட்டுகின்றன. இது புதிய ஹெட்லைட்ஸ், அகலமான கிரில் மற்றும் ஏடாஸ் உடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்பர் மற்றும் ஏற்கனவே மேலே பொருத்தப்பட்ட பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அலோய் வீல்ஸின் வடிவமைப்பும் புதியதாக இருக்கும்.
சைட் மற்றும் ரியர் இப்போது இருப்பதைப் போலவே இருக்கும். ஆனால், இவை எஸ்யுவியின் ஆரம்பப் படங்கள் என்பதால், ரியரிலும் மாற்றங்கள் இருக்கலாம்.
இந்தியாவில் கிராண்ட் செரோக்கியின் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. இது 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது, இது எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4x4 செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 268bhp பவரையும், 400Nm டோர்க்கையும் உருவாக்குகிறது.
இந்தியாவில் ஜீப் கிராண்ட் செரோக்கி விற்பனை சரியாக இல்லை. நிறுவனம் இந்த எஸ்யுவியை அப்டேட் செய்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.
தற்போது, நிறுவனம் கிராண்ட் செரோக்கிக்கு ரூ. 12 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதால், அதன் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்