- சிங்கிள் மற்றும் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்
- விரைவில் இதன் டெலிவரி தொடங்கும்
ஸ்கோடா இறுதியாக இந்தியாவில் மீண்டும் சூப்பர்ப் ஐ நாட்டில் ரூ. 54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த செடானை ஒரு சிங்கிள் இன்ஜின் விருப்பத்துடன் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் மட்டுமே வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்கோடா ஷோரூம் அல்லது பிராண்டின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் சூப்பர்ப்ஐ முன்பதிவு செய்யலாம், டெலிவரிகள் இந்த மாத இறுதியில் தொடங்கும்.
எக்ஸ்டீரியரில், இந்த செடான் குரோம் சரவுண்ட்ஸ், ஃப்ரண்ட் பம்பரில் லோயர் ஏர் டேம், எல்இடி ஹெட்லேம்ப்கள், கார்னரிங் ஃபங்ஷனுடன் கூடிய எல்இடி ஃபாக் லேம்ப்ஸ், க்ரிஸ்டல் எலிமென்ட்ஸ் கொண்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ரியர் ஃபாக் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 18-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸும் உள்ளன. மாடலின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டீரியரில், இது மொபைல் கனெக்ட் உடன் கூடிய 9.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பவர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ்,டிரைவர் சீட்க்கான மசாஜ் ஃபங்ஷன், லேதரால் மூடப்பட்ட கியர் நாப், த்ரீ-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், கூடுதலாக, இது ஒரு வர்ச்சுவல் காக்பிட், 12-ஸ்பீக்கர் கொண்ட கேன்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் பின்புற ஜன்னல் மற்றும் விண்ட்ஸ்கிரீனுக்கான ரோல்-அப் சன் விசர்களைக் கொண்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக, ஏபிஎஸ், ஹில் பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஆக்டிவ் டிபீஎம்எஸ், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட் மற்றும் ஒன்பது ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா சூப்பர்ப் 2.0 லிட்டர், ஃபோர்-சிலிண்டர், டீஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 187bhp பவர் மற்றும் 320Nm டோர்க்கை உருவாக்குகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இந்த இன்ஜினுடன் செவன்-ஸ்பீட் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் மட்டுமே கிடைக்கிறது. மேலும், இந்த இன்ஜின் BS6 ஃபேஸ்-2 இன் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.