- ஸ்கோடா கோடியாக்கிற்கு போட்டியாக விரைவில் வரவுள்ளது நிசான் X-ட்ரைல்
- சிபியு மாடலாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய மாடல்
நிசான் நிறுவனம் எக்ஸ்-ட்ரைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வேகத்தை அதிகரித்துள்ளது. அதாவது, சில நாட்களுக்கு முன்பு X-ட்ரைல் மாடலுக்கான டீசரை வெளியிட்ட நிசான், தற்போது அதே மாடலுக்கான மற்றொரு டீசரை வெளியிட்டுள்ளது.
முன்பு குறிப்பிட்டது போல் X-ட்ரைல் 1.5 லிட்டர் த்ரீ-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த இன்ஜின் 201bhp பவரையும், 305Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், காரின் இன்ஜின் சிவிடீ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். ஆனால் இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நிசான் அதை ஆல் வீல் டிரைவ் (AWD) உடன் வழங்குகிறது. நிசான் நிறுவனம் இந்தியாவில் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்-ட்ரைல் இ-பவர் ஹைப்ரிட்டைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் அதே வேளையில், ஒவ்வொரு அச்சிலும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும்.
இங்குள்ள டீசரில் இருந்து நமக்குக் கிடைக்கும் சிறிய துப்பு என்னவென்றால், இது எந்தவிதமான காஸ்மெட்டிக் அப்டேட்களும் இல்லாமல் வரும். இதேபோல், இது ஒரு முழுமையான பில்ட் யூனிட்டாக (CBU) இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும். அறிமுகத்திற்குப் பிறகு, இந்த எஸ்யுவி ஸ்கோடா கோடியாக்குடன் போட்டியிடும், இதுவும் ஒரு புதுப்பிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்