- புதிய ஸ்பிரிண்ட் வேரியன்ட்டைப் பெறுகிறது
- இதன் விலை ரூ. 9.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
எம்ஜி இந்தியா தனது என்ட்ரி லெவல் எஸ்யுவி ஆஸ்டர்ரை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட 2024 ஆஸ்டர் இப்போது எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.98 லட்சம். இது ஸ்பிரிண்ட் (புதிய), ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ மற்றும் சேவ்வி ப்ரோ என ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட எம்ஜி ஆஸ்டர் ஐ-ஸ்மார்ட் 2.0, 80 க்கும் மேற்பட்ட கனெக்டெட் ஃபீச்சர்ஸ், ஜியோ வாய்ஸ் சிஸ்டம், ஆன்டி-தீஃப் ஃபீச்சர் டிஜிட்டல் ஃபங்ஷனுடன் கிடைக்கும். மற்ற அம்சங்களான வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் லெவல் 2 ஏடாஸ் தொகுப்பு ஆகியவை அடங்கும்.
ஆஸ்டரின் இன்ஜினில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை. இது தொடர்ந்து அதே 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிவிடீ மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட் ஆகியவை அடங்கும்.
அறிமுகம் குறித்து, எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா கூறுகையில், “நம்முடைய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை, சமீபத்திய ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் தயாரிப்புகள் மூலம் பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாக்குறுதியைக் கடைப்பிடித்து, இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பிராண்டாக, ஆஸ்டர் 2024 வரிசையானது, கார் வாங்குபவர்களை மகிழ்விக்கும் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் சிறந்த மதிப்பு முன்மொழிவுகளின் கலவையை வழங்குகிறது” என்று அவர் கூறினார்.