- இன்று கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் லான்ச்
- இது இந்த செக்மென்ட்டில் இரண்டாவதுஏடாஸ்ஸைப் பெறும் கார் ஆகும்
கியா இந்தியா இன்னும் ஃபேஸ்லிஃப்ட் சோனெட்டை வெளியிடவில்லை, ஆனால் அதன் சில பிரத்யேக தகவல்களை எங்களால் பெற முடிந்தது. இந்த காம்பாக்ட் எஸ்யுவி ஆனது ஏடாஸ்லெவல் 1மற்றும் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக உள்ள டாப் 10 அம்சங்கள் இங்கே உள்ளன.
கியா சோனெட் ஏடாஸ் அம்சங்களின் விவரங்கள் விரிவாக உள்ளன
1. ஃப்ரண்ட் கோலிஷன் வார்னிங் (எஃப்சிடபிள்யூ)
எதிர்பாராத தடைகள் ஏதேனும் உங்கள் முன்பே இருந்தால் கார் உங்களை எச்சரிக்கும்.
2. ஃப்ரண்ட் கோலிஷன்-அவாய்டான்ஸ் அஸ்சிஸ்ட்– கார் (எஃப்சிஏ – கார்)
எந்தவொரு வாகனத்துடனும் மோதல் பற்றி கார் எச்சரிப்பது மட்டுமல்லாமல், பிரேக்குகளையும் பயன்படுத்துகிறது.
3. ஃப்ரண்ட் கோலிஷன்- அவாய்டான்ஸ் அஸ்சிஸ்ட்- சைக்கிள் (எஃப்சிஏ – சைக்கிளிஸ்ட்)
புதிய சோனெட் சைக்கிள் ஓட்டுபவர்களையும் கண்டறியும்,மோதல் பற்றி எச்சரிக்கவும் மற்றும் பிரேக்குகளைப் பயன்படுத்தவும் முடியும்.
4. ஃப்ரண்ட் கோலிஷன்- அவாய்டான்ஸ் அஸ்சிஸ்ட்– பாதசாரி (எஃப்சிஏ- பாதசாரி)
கூடுதலாக, கார் பாதசாரிகளுடன் மோதலைப் பற்றி எச்சரிக்கும் மற்றும் நீங்கள் சரியான நேரத்தில் செயல்படவில்லை என்றால் விரைவாக பிரேக்குகளை இது பயன்படுத்தும்.
5. லேன் கீப் அசிஸ்ட் (எல்கேஏ)
நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், 2024 சோனெட் தானாகவே உங்களை உங்கள் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
6. லேன் டிபார்ச்சர் வார்னிங்க் (எல்டிடபிள்யூ)
இன்டிகேட்டர் இல்லாமல் உங்கள் பாதையை விட்டு நகரத் தொடங்கினால் கார் உங்களுக்குத் தெரிவிக்கும்.
7. லேன் ஃபாலோயிங் அசிஸ்ட் (எல்எஃப்ஏ)
இது சாலைப் பாதைகளைக் கண்டறிவது மட்டுமின்றி, சாலையின் மையப் பகுதிக்கு உங்களைத் திருப்பி அனுப்பும் திறன் கொண்டது.
8. லீட்டிங் வேஹிகள் டிபார்ச்சர் வார்னிங்க் (எல்விடிஏ)
ஏடாஸின் உதவியுடன், முன்னால் உள்ள வாகனத்தின் மூவ்மென்ட்டை சோனெட் பின்பற்றுகிறது. முன்னால் உள்ள வாகனம் நகரத் தொடங்கினால் அது உங்களுக்குத் தெரிவிக்கும்.
9. ஹை பீம் அசிஸ்ட் (எச்பிஏ)
மற்றொரு உள்ளுணர்வு அம்சம் என்னவென்றால், காரின் ஹெட்லைட்கள் தானாகவே வரவிருக்கும் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
10. டிரைவர் அட்டென்ஷன் வார்னிங்க் (டிஏடபிள்யூ)
மற்ற எல்லா எச்சரிக்கைகளுக்கும் மத்தியில், கவனத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் மற்றொரு எச்சரிக்கையும் உள்ளது.
2024 கியா சொனேட் இன்ஜின் விவரங்கள்
2024 கியா சோனெட்டில் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளன. ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ, சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீயூனிட் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்