- புதிய டூயல்-டோன் அலோய் வீல்ஸுடன் இது இருக்கும்
- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லான்ச் செய்யப்படலாம்
ஹூண்டாய் அடுத்த ஆண்டுக்குள் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தலாம். அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த மாடல் இந்திய சாலைகளில் காணப்பட்டது, இது கிராண்ட் விட்டாரா மற்றும் செல்டோஸுக்கு போட்டியாக இருக்கும் இந்த கார் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.
இதில் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் காட்டப்பட்டுள்ளது. புதிய டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டிஆர்எல்’எஸ், புதிய கிரில், ஃப்ரன்ட் பம்பரில் ஏடாஸ் சென்சார்ஸ், ஏ-பில்லரில் இன்னைக்கப்பட்ட ஓஆர்விஎம்எஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் புதிய எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டாவின் இன்டீரியரில் புதிய தீம், ஏடாஸ், 360 டிகிரி கேமரா மற்றும் புதிய அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெறலாம். இது ஏற்கனவே ஒரு பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவ் மோட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2024 ஹூண்டாய் க்ரெட்டா தற்போதைய வெர்ஷன்னைப் போலவே 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்