- இது எஸ்யுவிக்கான ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும்
- பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்கிறது
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் எஸ்யுவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 14.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது எஸ்யுவிக்கான புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும், இது டிசைன் மற்றும் அம்ச புதுப்பிப்புகளின் அடிப்படையில் அதன் ஃபைவ்-டோர் உடன்பிறந்த க்ரெட்டாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது.
டிசைன் மாற்றங்கள்
எக்ஸ்டீரியர், அல்கஸார் ஒரு புதிய கிரில், ஹெட்லேம்ப்ஸ், அலோய் வீல்களுக்கான வடிவமைப்பு மற்றும் ஹூண்டாய்-கனெக்டட் டெயில் லேம்ப் ஆகியவற்றைப் பெறுகிறது. இது வெளிச்செல்லும் மாடலின் நிழற்படத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் இது முற்றிலும் புதிய வாகனமாக உணர போதுமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக் பேர்ல், ரேஞ்சர் காக்கி, ஃபியரி ரெட், ரோபஸ்ட் எமரால்டு பேர்ல், ஸ்டாரி நைட், டைட்டன் கிரே மேட் மற்றும் அட்லஸ் ஒயிட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் ஆகிய வண்ணங்களிலிருந்து வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.
இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
உள்ளே, ஹூண்டாய் பெரிய டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வென்டிலேடெட் ரியர் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ரியர் இடதுபுற பயணிகளுக்கான பாஸ் மோட் ஃபங்ஷன் மற்றும் இப்போது லெவல்-2 ஏடாஸ்போன்ற அம்சங்களுடன் கேபினை மேம்படுத்தியுள்ளது. ஆறு மற்றும் ஏழு சீட்ஸ் விருப்பங்கள் முன்பு போலவே தொடர்கின்றன மற்றும் தற்போதுள்ள மாடலைப் போலவே வேரியன்ட்ஸும் பிரிக்கப்பட்டுள்ளன.
இன்ஜின் விருப்பங்கள் மற்றும் போட்டியாளர்
2024 ஹூண்டாய் அல்கஸார் 1.5-லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பத்தை கொண்டிருக்கும், இது முறையே 158bhp/253Nm மற்றும் 113bhp/250Nm டோர்க்கை உற்பத்தி செய்கின்றன. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற கார்களுடன் ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்