-புத்தம் புதிய ஃப்ரண்ட் ஃபேஷியாவை பெறுகிறது
-இந்த ஆண்டு இறுதிக்குள் லான்ச் செய்ய வாய்புள்ளது
ஆடி தனது 2024 Q7 எஸ்யுவியை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வால்வோ XC90-போட்டியாளர் முதலில் மார்ச் 2024 இல் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும், மேலும் இந்த ஆண்டின் இறுதியில் படிப்படியாக இந்தியாவுக்கு வந்து சேறும். இந்த சொகுசு எஸ்யுவியின் முந்தைய ஜெனரேஷன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாகன உற்பத்தியாளர் அதன் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னை மிகவும் நம்பிக்கைக்குரிய தோற்றத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் Q7 இல் ஒருவர் காணக்கூடிய மிக முக்கியமான மாற்றம், சாடின் சில்வர் சரவுண்டில் இணைக்கப்பட்ட புதிய அக்ட்டாகோணல்-தீம் கொண்ட ஃப்ரண்ட் கிரில் ஆகும். புதிய மேட்ரிக்ஸ் எச்டி எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய எல்இடி டெயில்லேம்ப்ஸ், ட்வீக் செய்யப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட லோயர் சென்ட்ரல் ஏர் இன்டேக் மற்றும் சைட் ஏர் கர்டேன் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். புதிய Q7 பைவ்-ஸ்போக், டைமண்ட்-கட், 20-22 இன்ச் வரையிலான அலோய் வீல்ஸில் சவாரி செய்கிறது. இந்த எஸ்யுவி இப்போது அஸ்காரி ப்ளூ, சாகிர் கோல்ட் மற்றும் சில்லி ரெட் ஆகிய மூன்று புதிய எக்ஸ்டீரியர் வண்ணங்களில் வருகிறது.
இன்டீரியரில், ஃபேஸ்லிஃப்ட் Q7 இல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான சில மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி உடன் பழைய மாடலின் டாஷ்போர்டு அமைப்பைப் பெறுகிறது. வார்சுவள் காக்பிட் இப்போது லேன்-சேஞ்ச் வார்னிங்க் மற்றும் தொலைதூர எச்சரிக்கைகள் போன்ற கூடுதல் செயல்பாடுகளைக் இது காட்டுகிறது.
ஆடி Q7 எஸ்யுவியின் இன்ஜினில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்திய ஸ்பெக் 335bhp மற்றும் 500Nm டோர்க்கை வெளிப்படுத்தும் 3.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்னை தொடர்ந்து பெற்றாலும், சர்வதேச ஸ்பெக் மாடல் 3.0-லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 3.0-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜினிலும் இருக்கலாம், மேலும் செயல்திறன்-மைய SQ7 க்கான 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினையும் இது பெறும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்