- இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ. 16.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- ஆறு மற்றும் ஏழு சீட்டர் ஆப்ஷனில் வழக்ங்கபடுகின்றன
டாடா சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவியான சஃபாரி ஃபேஸ்லிஃப்டை ரூ. 16.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையில் லான்ச் செய்தது. இது ஆறு மற்றும் ஏழு சீட்டர் கொண்ட ஆப்ஷனில் ஐந்து வேரியண்ட்ஸ் மற்றும் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகின்றன. 2023 சஃபாரியை ரூ. 25,000 டோக்கன் தொகை செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றன, டெலிவரிகள் வரும் வாரங்களில் தொடங்கும்.
2023 டாடா சஃபாரியின் ஆண்-ரோடு விலைகளை கீழே பட்டியல்லிட்டுள்ளோம்:
நகரம் | பேஸ் வேரியண்ட் | டாப் வேரியண்ட் |
சென்னை | ரூ. 19.74 லட்சம் | ரூ. 33.07 லட்சம் |
மும்பை | ரூ. 19.75 லட்சம் | ரூ. 33.31 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 19.86 லட்சம் | ரூ. 33.21 லட்சம் |
மதுரை | ரூ. 19.86 லட்சம் | ரூ. 33.21 லட்சம் |
பெங்களூரு | ரூ. 20.19 லட்சம் | ரூ. 34.05 லட்சம் |
திருப்பூர் | ரூ. 19.86 லட்சம் | ரூ. 33.21 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 20.18 லட்சம் | ரூ. 34.04 லட்சம் |
கொச்சி | ரூ. 20.17 லட்சம் | ரூ. 35.11 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 19.86 லட்சம் | ரூ. 33.21 லட்சம் |
டெல்லி | ரூ. 19.49 லட்சம் | ரூ. 32.58 லட்சம் |
2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒரு ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இந்த மோட்டார் 168bhp மற்றும் 350Nm டோர்க் திறனை வெளியிடும் சக்தி கொண்டது.