- ரூ. 15.49 லட்சத்தில் இருந்து ஆரம்ப விலை
- 10 வேரியண்ட்ஸில் கிடைக்கும்
டாடா மோட்டார்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் ஹேரியரை ரூ. 15.49 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. மிட்-சைஸ் எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஏழு வண்ண விருப்பங்களில் 10 வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. புதிய ஹேரியரை முன்பதிவு செய்யத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள், அடுத்த மாதம் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில், இந்தியாவின் 10 சிறந்த நகரங்களில் 2023 டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்டின் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை ரேஞ்சை பட்டியலிட்டுள்ளோம்.
நகரம் | பேஸ் வேரியண்ட் | டாப் வேரியண்ட் |
மும்பை | ரூ.18.91 லட்சம் | ரூ. 32.23 லட்சம் |
சென்னை | ரூ. 19.04 லட்சம் | ரூ. 32.16 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 19.02 லட்சம் | ரூ.32.13 லட்சம் |
மதுரை | ரூ. 19.02 லட்சம் | ரூ. 32.13 லட்சம் |
பெங்களூரு | ரூ. 19.34 லட்சம் | ரூ. 32.95 லட்சம் |
திருப்பூர் | ரூ. 19.02 லட்சம் | ரூ. 32.13 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 19.33 லட்சம் | ரூ. 32.94 லட்சம் |
கொச்சி | ரூ. 19.31 லட்சம் | ரூ.33.97 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 19.02 லட்சம் | ரூ. 32.13 லட்சம் |
டெல்லி | ரூ. 18.67 லட்சம் | ரூ. 31.52 லட்சம் |
புதிய டாடா ஹேரியர் ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர் +, அட்வென்ச்சர் + டார்க், அட்வென்ச்சர் + A, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் டார்க், ஃபியர்லெஸ் + மற்றும் ஃபியர்லெஸ் + டார்க் என 10 வேரியண்ட்ஸில் கிடைக்கும். அம்சங்களைப் பொறுத்தவரை, எஸ்யுவி ஆனது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்-கண்ட்ரோல்ட் எச்விஏசி பேனல் மற்றும் இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் வருகிறது. ஏர் ப்யூரிஃபையர், டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் மூட் லைட்டிங், பவர்ட் டெயில்கேட், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் உள்ளன.
ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டோர்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்