- ஸ்டாண்டர்ட் 4மேட்டிக் உடன் இரண்டு இன்ஜின் விருப்பத்தில் கிடைக்கும்
- லேட்டஸ்ட் என்டீஜி 7 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்படும்
ரூ.1.5 லட்சம் டோக்கன் தொகையில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, தனது புதிய ஜிஎல்சியின் புக்கிங்கை ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்தது. இப்போது, ஆட்டோமேக்கர் அதிகாரபூர்வமாக இந்த எஸ்யுவியை நாட்டில் ரூ.73.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.
புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி எக்ஸ்டீரியர் மற்றும் டிசைன்
டிசைன் மற்றும் ஸ்டைலிங் அடிப்படையில், 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது சில காஸ்மெட்டிக் மாற்றங்களைப் பெறுகிறது. புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் கூடிய ட்ரை-ஸ்டார் லோகோ மற்றும் புதிய எல்இடி டிஆர்எல்ஸ் கொண்ட பெரிய கிரில் பெறுகிறது. எஸ்யுவியின் நீளம் 60 மி.மீ அதிகரித்து, 4,716 மி.மீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதன் விளைவாக வீல்பேஸ் 15 மி.மீ அதிகரித்து 2,888 மி.மீ ஆக உள்ளது. பின்புறத்தில், அப்டேடட் ஜிஎல்சியின் புதிய எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ஒரு பவர்ட் டெயில்கேட் உடன் ட்வீக் செய்யப்பட்ட பம்பரைப் பெறுகிறது.
2023 மெர்சிடிஸ் ஜிஎல்சி இன்டீரியர்
இன்டீரியரில் 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3-இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் லேட்டஸ்ட் என்டீஜி 7 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். கேபினை சியன்னா ப்ரௌன், பிளாக் மற்றும் மச்சியாடோ பெய்ஜ் ஆகிய மூன்று இன்டீரியர் தீம்ஸில் பெறலாம்.
எஸ்யுவியில் புதியது என்னவென்றால், 360 டிகிரி கேமரா, இது லைவ் வீடியோ ஃபீட் மற்றும் சரியான டயர் பொசிஷன், பனோரமிக் சன்ரூஃப், மல்டி-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஏடாஸ் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெளிப்படையான போன்னெட்டைக் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி இன்ஜின் விவரங்கள்
ஆட்டோமேக்கர் ஜிஎல்சியை புதிய இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்குகிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மில் நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைந்து பிராண்டின் 4மேட்டிக் சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் பவர் அனுப்புகிறது.
2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி விலை
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
மெர்சிடிஸ்ஜிஎல்சி 300 | ரூ. 73.5 லட்சம் |
மெர்சிடிஸ்ஜிஎல்சி 220d | ரூ. 74.5 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்