- இரண்டு ட்ரிம்ஸில் வழங்கப்படும்
- சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் பெறலாம்
சில வாரங்களுக்கு முன்பு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா,i20ஃபேஸ்லிஃப்ட்டை நாட்டில் லான்ச் செய்தது. இப்போது, இந்த ஆட்டோமேக்கர்,தனது ஹேட்ச்பேக்கின் N லைன் வேரியண்ட்டை ரூ. 9.99 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது. N6 மற்றும் N8 என பெயரிடப்படும் இரண்டு ட்ரிம்ஸில் வாங்கலாம், மேலும், இதை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸில் தேர்வு செய்யலாம்.
ஹூண்டாய் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டி வெர்ஷன் போஸ் ப்ரீமியம் ஏழு-ஸ்பீக்கர் சிஸ்டம், 127 உட்பொதிக்கப்பட்ட விஆர் கமாண்ட்ஸ், வரைபடங்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான ஓடீஏ அப்டேட்ஸ், 52 ஹிங்கிலிஷ் வாய்ஸ் கமாண்ட்ஸ் மற்றும் 60 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கார் அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இது இயற்கையின் ஏழு சுற்றுப்புற ஒலிகள், சி-டைப் சார்ஜர் மற்றும் 10 பிராந்திய மற்றும் இரண்டு சர்வதேச மொழிகளை ஆதரிக்கும் பல மொழி யுஐஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் ஃபேஸ்லிஃப்டட் i20 N லைனை தேர்வு செய்யலாம். மோனோடோன்ஸில் அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் க்ரே, தண்டர் ப்ளூ மற்றும் ஸ்டார்ரி நைட் ஆகியவை அடங்கும். டூயல்-டோன்ஸ், மறுபுறம், அட்லஸ் ஒயிட் மற்றும் தண்டர் ப்ளூ ஆகியவற்றை - இரண்டும் அபிஸ் பிளாக் ரூஃப் உடன் உள்ளடக்கியது.
ஹூண்டாய் i20 N லைனின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 118bhp மற்றும் 172Nm டோர்க்கை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷனில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் செவன்-ஸ்பீட் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது.
2023 ஹூண்டாய் i20 N லைனின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு:
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
N6 எம்டீ | ரூ. 9,99,490 |
N6 டிசிடீ | ரூ. 11,09,900 |
N8 எம்டீ | ரூ. 11,21,900 |
N8 டிசிடீ | ரூ. 12,31,900 |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்