- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிட்டதட்ட 19,000 அதிக பஸ்சேன்ஜ்ர் வெஹிகல்ஸ் விற்பனையானது
- வாகன சேல்ஸில் 11% அதிகரிப்பு
தனியார் வாகனங்களை வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 2023 இல் பஸ்சேன்ஜ்ர் வெஹிகல்ஸின் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 2,95,842 பஸ்சேன்ஜ்ர் வெஹிகல்ஸை விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் விற்பனை எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் 2023 இல், இந்திய மார்க்கெட்டில் 3,15,153 பஸ்சேன்ஜ்ர் வெஹிகல்ஸ் விற்பனை செய்யப்பட்டன. அதன்படி, ஆண்டுக்கு ஆண்டு விற்பனை 6.53% அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தை விட 11% அதிக பஸ்சேன்ஜ்ர் வெஹிகல் விற்பனையாகியுள்ளன
ஃபாடா (FADA) அறிக்கையின்படி, இந்திய வாகன சந்தையில் மாதந்தோறும் பஸ்சேன்ஜ்ர் வெஹிகல்ஸின் விற்பனையைப் பார்த்தால், எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. அறிக்கையின்படி, ஆகஸ்ட் 2023 புள்ளிவிவரங்களை ஜூலை 2023 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகனங்களின் விற்பனை 10.94% அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில், நாட்டில் 2,84,064 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கமர்ஷியல் வெஹிகல்ஸின் விற்பனையில் அதிகரிப்பு
கமர்ஷியல் வெஹிகல்ஸின் விற்பனையும் நாட்டில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2023 இல் நாட்டில் 75,295 கமர்ஷியல் வெஹிகல்ஸ் விற்கப்பட்டன, இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2023 இல் 72,940 யூனிட்ஸ் உடன் ஒப்பிடுகையில் 3.23% அதிகமாகும். அதே நேரத்தில், ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் கமர்ஷியல் வெஹிகல்ஸ் மூன்று சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் எலக்ட்ரிக் ரிக்ஷாக்கள் மற்றும் இ-ஆட்டோஸின் விற்பனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இதைப் பற்றி நீங்கள் எங்கள் கட்டுரையைப் படிக்கலாம்: ஆகஸ்ட் 2023 இல் இந்தியாவில் இ-ரிக்ஷா மற்றும் ஆட்டோவின் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்