- அதன் அனைத்து எஸ்யுவிஸ்க்கும் ஒரு மாதத்திற்கு இணைந்தது 57,000 முன்பதிவுகளைப் பெறுகிறது
- ஓபன் புக்கிங்ஸின் பட்டியலில் ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் முதலிடம் வருகின்றன
மஹிந்திரா ஸ்கார்பியோ தற்போதைய ஓபன் புக்கிங்ஸ்:
இன்றுவரை, ஸ்கார்பியோ நாட்டின் மிகவும் பிரபலமான எஸ்யுவிஸில் ஒன்று. அதன் பிரபலம் மற்றும் அதிக தேவையுடன், மே 2023 நிலவரப்படி ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் க்கான தற்போதைய ஓபன் புக்கிங் 1.17 லட்சம் யூனிட்ஸாக உள்ளது. மேலும், உற்பத்தியாளர் இந்த இரண்டு எஸ்யுவிஸ்க்கும் மாதத்திற்கு 14,000 முன்பதிவுகளை பெற்று வருகிறது.
ஒரு மாதத்திற்கான மஹிந்திரா எஸ்யுவிஸின் புக்கிங்ஸ்:
இது தவிர, XUV700 மற்றும் தார் போன்ற பிராண்டின் பிற பிரபலமான எஸ்யுவிஸும் முறையே 78,000 மற்றும் 58,000 ஓபன் புக்கிங்ஸை கொண்டுள்ளன. XUV300, XUV400, XUV700, தார், பொலேரோ நியோ, ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஆகியவற்றை உள்ளடக்கிய எஸ்யுவிஸ்க்காக கார் தயாரிப்பாளர் மாதத்திற்கு சராசரியாக 57,000 முன்பதிவுகளைப் பெறுகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்:
மஹிந்திரா ஸ்கார்பியோ க்ளாசிக் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 130bhp மற்றும் 300nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளிட்ட இரண்டு பவர்ட்ரெயின் விருப்பங்களுடன் வருகிறது. இரண்டு இன்ஜின்ஸும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மஹிந்திராவின் 4Xplor சிஸ்டமும் சலுகையில் உள்ளது.
வெயிட்டிங் பீரியடை குறைக்க, மஹிந்திரா தனது சாக்கன் மற்றும் நாசிக்கில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர, உற்பத்தியாளர் ஃபைவ்-டோர் தார்ரை 2024 க்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்