- தார் ரோக்ஸின் ரூ. 12.99 லட்சம்
- 3-டோர் தார் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடனும் 4X4 ஐ பெறுகிறது
மஹிந்திரா சமீபத்தில் தார் ரோக்ஸ் என்ற 5-டோர் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய எஸ்யுவி அனைத்து பரிமாணங்களிலும் பெரியது மட்டுமல்ல, 3-door வெர்ஷனில் தவறவிட்ட பல அம்சங்களையும் வழங்குகிறது. இந்த கட்டுரையில், 2020 முதல் விற்பனையில் உள்ள 3-டோர் தார் மீது தார் ரோக்ஸ் வழங்கும் டாப் அம்சங்களைப் இதில் பட்டியலிட்டுள்ளோம்.
லெவல் 2 ஏடாஸ்
புதிய தார் ரோக்ஸ் லெவல் 2 ஏடாஸ் தொகுப்புடன் வழங்கப்படுகிறது, இது ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங் (எஃப்சிடபிள்யூ), ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ்
தார் ரோக்ஸில் புதிய அல்-ஒயிட் அப்ஹோல்ஸ்டரியைப் பெறுகிறது. அது மட்டுமின்றி, புதிய அப்ஹோல்ஸ்டரியுடன், தார் ரோக்ஸ் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸையும் பெறுகிறது. மேலும், டிரைவர் சீட்கான எலக்ட்ரிக் அட்ஜஸ்ட்டெபளையும் அதே நேரத்தில் கோ-டிரைவர் சீட்ஸ்க்கு மேனுவல் அட்ஜஸ்ட்டெபல் சீட்ஸ்ஸையும் இது பெறுகிறது.
360 டிகிரி சரவுண்ட் கேமரா
XUV 3XO உள்ளிட்ட பல லேட்டஸ்ட் மஹிந்திரா தயாரிப்புகளைப் போலவே, தார் ரோக்ஸிலும் 360-டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள் மூலம் தார் ரோக்ஸ் பயனடைகிறது.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
தார் ரோக்ஸ் 3-டோர் வெர்ஷனை விட அதிக டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் புதிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை வயர்லெஸ் முறையில் இயக்கக்கூடிய பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனைப் பெறுகிறது. மேலும், தார் ரோக்ஸ் அட்ரினோக்ஸ்-கனெக்ட் கார் செயல்பாடுகளின் முழு தொகுப்பையும் உள்ளமைக்கப்பட்ட அலெக்சாவுடன் பெறுகிறது.
தார் ரோக்ஸின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன் உடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
சன்ரூஃப்
ஒருவர் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட்டைப் பொறுத்து, தார் ரோக்ஸ் சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் மற்றும் ஒரு பெரிய டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் என இரண்டு சன்ரூஃப் விருப்பங்களில் பெறலாம்.
தார் ரோக்ஸ், டாப் வேரியன்ட்க்கு, மேனுவல் ஹேண்ட்பிரேக்கை எடுதுவிட்டு, ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷனுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கை வழங்குகிறது.
ப்ரீமியம் மியூசிக் சிஸ்டம்
புதிய தார் ரோக்ஸ், ஹர்மன் கார்டன் மூலம் எட்டு ஸ்பீக்கர்ஸ் மற்றும் சப்-வூஃபருடன் சிறந்த மியூசிக் சிஸ்டமை பெறுகிறது. ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு சவுண்ட் மோட்ஸும் இதில் உள்ளன.
அல் எல்இடி லைட்டிங்
புதிய தார் ரோக்ஸ் ஆனது சி-வடிவ டிஆர்எல்’ஸ், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஃபோக் லேம்ப்ஸ், டர்ன் இண்டிகேட்டர்கள், டெயில்லேம்ப்ஸ் மற்றும் உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்ப் உள்ளிட்ட எல்இடி லைட்டிங் அமைப்பைப் பெறுகிறது.
கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்
3-டோர் தார் போலல்லாமல், புதிய தார் ரோக்ஸ் ஒரு கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனைப் பெறுகிறது. இருப்பினும், கீலெஸ் என்ட்ரி ஃபங்ஷன்னை இது தவறவிடுகிறது.
பெரிய 19-இன்ச் அலோய் வீல்ஸ், பெரிய பூட் ஸ்பேஸ், எக்ஸ்டென்டெட் வீல்பேஸ், 60:40 ஸ்பிளிட் ரியர் பெஞ்ச் சீட், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ் போன்ற பல அம்சங்கள் தார் ரோக்ஸில் உள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்