இந்த காரில் ஆர்வமாக உள்ளனர்
விலை நியாயமானது என்று நினைக்கிறேன்
இந்த காரின் வடிவமைப்பு புடிச்சிருக்கு
விலை
ஹூண்டாய் ஐயோனிக் 6 விலைகள் Rs. 50.00 லட்சம் - Rs. 55.00 லட்சம் இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்டைப் பொறுத்து.
ஹூண்டாய் ஐயோனிக் 6 இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
ஐயோனிக் 6 ஜனவரி 11, 2023 அன்று ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது.
இதில் என்ன வேரியண்ட்ஸ் கிடைக்கும்?
ஐயோனிக் 6 செடான் சிங்கிள் ஃபுல்லி லோடெட் ட்ரிமில் கிடைக்கும்.
ஐயோனிக் 6 இல் என்ன அம்சங்கள் உள்ளன?
ஐயோனிக் 6 கூபே போன்ற ரூஃப் மற்றும் நீளமான வெட்டுக்கள் மற்றும் மடிப்புகள் ஆகியவற்றைப் பெறுகிறது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, ஐயோனிக் 4,855 மி.மீ, அகலம் 1,880 மி.மீ மற்றும் 1,495 மி.மீ உயரத்தில் உள்ளது. இதன் வீல்பேஸ் 2,950 மி.மீ ஆகும். அம்சப் பட்டியலில் டூயல் எல்இடி ஸ்ட்ரிப்ஸ் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஃப்ளஷ் பொருத்தும் டோர் ஹேண்டல்ஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏடாஸ் ஆகியவை அடங்கும்.
ஐயோனிக் 6 இன் பேட்டரி பேக் விவரக்குறிப்புகள் என்ன?
ஐயோனிக் 6 ஆனது 53kWh யூனிட் மற்றும் 77kWh யூனிட் அடங்கிய இரண்டு பேட்டரி பேக்ஸில் வழங்கப்படுகிறது. ஆர்டபிள்யூடி வெர்ஷன் 228bhp மற்றும் 350Nm டோர்க்கை உருவாக்குகிறது, அதே சமயம் ஏடபிள்யூடி வெர்ஷன் டூயல் மோட்டார் அமைப்புடன் 325bhp மற்றும் 605Nm டோர்க்கை உருவாக்குகிறது. வேரியண்ட்டைப் பொறுத்து, கார் 429 கி.மீ முதல் 614 கி.மீ வரை WLTP- சான்றளிக்கப்பட்ட டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது.
ஐயோனிக் 6 பாதுகாப்பான காரா?
ஹூண்டாய் ஐயோனிக் 6 ஒரு ஃபைவ்-ஸ்டார் (யூரோ என்கேப்) ரேட்டிங் பெற்ற கார் ஆகும்.
ஐயோனிக் 6 க்கு போட்டியாளர்கள் யார்?
ஹூண்டாய் ஐயோனிக் 6 ஆனது பிஎம்டபிள்யூ i4, கியா EV6, வால்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் இந்திய மார்க்கெட்டில் உள்ள விருப்பங்களுக்கு எதிராக போட்டியிடும்.
கடைசியாக அக்டோபர் 04, 2023 அன்று அப்டேட் செய்யப்பட்டது.
Interested in Car | ஆம் |
Expected Price | நியாயமான |
Like the Looks | ஆம் |
Interested in Car | ஆம் |
Expected Price | ஹை |
Like the Looks | ஆம் |